தெய்ன் செய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெய்ன் செய்ன்
Thein Sein


மியான்மரின் அரசுத்தலைவர்
பதவியேற்பு
பெப்ரவரி 2011
பிரதமர் அறிவிக்கப்படவில்லை
முன்னவர் தான் சுவே

மியான்மரின் பிரதமர்
பதவியில்
பதவியேற்பு
24 அக்டோபர் 2007
பதில்: ஏப்ரல் 2007 – 24 அக்டோபர் 2007
Leader தான் சுவே
முன்னவர் சோயி வின்
பின்வந்தவர் அறிவிக்கப்படவில்லை
அரசியல் கட்சி ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான முன்னணிக் கட்சி(2010–இன்று)

பிறப்பு 20 ஏப்ரல் 1945 (1945-04-20) (அகவை 69)[1]
வாழ்க்கைத்
துணை
கின் கின் வின்

தெய்ன் செய்ன் (Thein Sein, பிறப்பு: ஏப்ரல் 20, 1945) மியான்மரின் (பர்மா) அரசுத்தலைவர் ஆவார். இவர் அரசுத்தலைவராக 2011, பெப்ரவரி 4 இல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் 2007 இல் இருந்து நாட்டின் இடைக்காலப் பிரதமராக இராணுவ ஆட்சியாளரால் நியமிக்கப்பட்டவர்[2]. அப்போதைய பிரதமராக இருந்த சோயி வின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை அடுத்து தெய்ன் செய்ன் பிரதமராக்கப்பட்டார்[3][4]. 2007 அக்டோபர் 24 இல் சோயி வின் இறந்ததை அடுத்து நிரந்தரப் பிரமரானார்[5].

ஆளும் இரானுவ ஆட்சிக் கட்சியின் முதல் செயலராக தெய்ன் செய்ன் பணியாற்றியிருந்தார். வங்காளதேசத்திற்கும், கம்போடியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார்[4].

இவர் பிரதமரான பின்னர், இராணுவத்தில் லெப். ஜெனரல் பதவியில் இருந்து முழுமையான ஜெனரல் பதவிக்குத் தரம் உயந்த்தப்பட்டார்[6]. பிரதமராக இருந்த போது லாவோஸ், வியட்நாம், மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உயர்மட்டப் பேச்சுக்களில் பங்குபற்றியிருந்தார்[7][8][9].

20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆளும் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, 2011, பெப்ரவரியில் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் எதிர்க்கட்சி இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெய்ன்_செய்ன்&oldid=1715057" இருந்து மீள்விக்கப்பட்டது