கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய ஆவியே, எழுந்தருள்வீர் என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவி பெருவிழாவின் போது திருப்பலியில் தூய ஆவியாரை நோக்கிப் பாடப்படும் தொடர் பாடல் ஆகும்.[1] இதனை 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டோ அல்லது கேட்டன்பரி ஆயராக இருந்த ஸ்டீபன் இலாங்டனோ இயற்றியிருக்கலாம்.
மத்திய காலத்தில் இயற்றப்பட்ட ஐந்து தொடர் பாடல்களில் இதுவும் ஒன்று. இது திரெந்து சங்கத்தில் 1570ஆம் ஆண்டு திருவழிபாட்டில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.[2]
| இலத்தீன் வடிவம் |
தமிழ் வடிவம் |
- Veni, Sancte Spiritus,
- et emitte caelitus
- lucis tuae radium.
- Veni, pater pauperum,
- veni, dator munerum
- veni, lumen cordium.
- Consolator optime,
- dulcis hospes animae,
- dulce refrigerium.
- In labore requies,
- in aestu temperies
- in fletu solatium.
- O lux beatissima,
- reple cordis intima
- tuorum fidelium.
- Sine tuo numine,
- nihil est in homine,
- nihil est innoxium.
- Lava quod est sordidum,
- riga quod est aridum,
- sana quod est saucium.
- Flecte quod est rigidum,
- fove quod est frigidum,
- rege quod est devium.
- Da tuis fidelibus,
- in te confidentibus,
- sacrum septenarium.
- Da virtutis meritum,
- da salutis exitum,
- da perenne gaudium,
- Amen, Alleluia.
|
- தூய ஆவியே, எழுந்தருள்வீர்
- வானினின்றுமது பேரொளியின்
- அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
- எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
- நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
- இதய ஒளியே, வந்தருள்வீர்.
- உன்னத ஆறுதலானவரே,
- ஆன்ம இனிய விருந்தினரே,
- இனிய தண்மையும் தருபவரே.
- உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
- வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
- அழுகையில் ஆறுதலானவரே.
- உன்னத பேரின்ப ஒளியே,
- உம்மை விசுவசிப்போருடைய
- நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
- உமதருள் ஆற்றல் இல்லாமல்
- உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
- நல்லது அவனில் ஏதுமில்லை.
- மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
- வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
- காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
- வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
- குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
- தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
- இறைவா உம்மை விசுவசித்து,
- உம்மை நம்பும் அடியார்க்குக்
- கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
- புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
- இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
- அழிவிலா இன்பம் அருள்வீரே.
- ஆமென். அல்லேலூயா.
|
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Liber Usualis, pp. 880-81. Solesmes 1961.
- ↑ David Hiley, Western Plainchant : A Handbook (OUP, 1993), II.22, pp.172-195
வெளி இணைப்புகள் [தொகு]