துத்தநாகம்-68

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாகம்-68, 68Zn
பொது
குறியீடு68Zn
பெயர்கள்துத்தநாகம்-68, Zn-68
நேர்மின்னிகள் (Z)30
நொதுமிகள் (N)38
நியூக்லைடு தரவு
இயற்கையில்
கிடைக்குமளவு
புவியில் 18.45% Zn
ஓரிடத்தான் நிறை67.9248476 Da
மேலதிக ஆற்றல்-70004 keV
கதிரியக்கத் தொடர்கள்68Cu (பீட்டா சிதைவு)
68Ga (இலத்திரன் பிடிப்பு)
Isotopes of துத்தநாகம்
நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை

துத்தநாகம்-68(Zinc-68) துத்தநாகத்தின் கதிரியக்கத்தன்மையற்ற ஓரிடத்தான் ஆகும்.[1][2] மனிதனுக்குத் தேவைப்படும் துத்தநாகத் தேவைகளை ஊடுருவிச் செல்லாமல் கண்டுபிடிக்க உதவும் தனிப்பட்ட சிறப்பான பண்பினை இந்த ஓரிடத்தான் கொண்டுள்ளது. உதாரணமாக, வளர்சிதைமாற்ற நோய்கள், மதுவுக்கு அடிமையாதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டுத் தேவைகள் மற்றும் பயன்பாட்டு ஆய்வுகளுக்கு இது பயன்படுகிறது. துத்தநாக உலோகமானது மிகத்துாய்மையான நிலையில் நானோ துகள்களாக கிடைக்கிறது. மென்தகட்டு பயன்பாடுகளுக்காக, இது தண்டுகளாக, வில்லைகளாக, துண்டுகளாக, குருணைகளாக மற்றும் உமிழ்தலைக் கண்டறிய உதவும் இலக்குப் பலகைகளாகவும் மற்றும் உலோகப்பாளங்களாக அல்லது துாள் நிலையிலேயும் கிடைக்கிறது. துத்தநாகம்-68 இயல்பான மருந்தளவுகளில் நச்சுத்தன்மையற்றதாகக் கருதப்படுகிறது. அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டால் குமட்டலை விளைளவிக்கலாம்.

கூடுதல் தகவல்கள்[தொகு]

துத்தநாகம் ஒரு d-தொகுதியைச் சேர்ந்த, தனிம வரிசை அட்டவணையின் தொகுதி 12, தொடர் 4 இல் காணப்படும் தனிமமாகும். துத்தநாகத்தின் ஒவ்வொரு கூட்டிலும் காணப்படக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கையானது 2, 8, 18, 2 ஆகும். இத்தனிமத்தின் இணைதிறன் எதிர்மின்னி அமைப்பானது,[Ar] 3d10 4s2 ஆகும். தனிம வடிவில் துத்தநாகத்தின் சிஏசு எண் 7440-66-6 ஆகும். துத்தநாக அணுவானது 133.5.பிகோமீட்டர் அணு ஆரத்தைக் கொண்டுள்ளது. இந்த அணுவின் வாண்டர்வால்சு ஆரமானது 139.பிகோமீட்டர் ஆகும். துத்தநாகம் மற்ற தனிமங்களோடு இணைந்து தாதுக்களாக கிடைக்கின்றது. துத்தநாகமானது நீலம் கலந்த வெண்ணிறத்தைக் கொண்டுள்ளது. இது பளபளப்பான உலோகமாகும். இந்த உலோகம் நல்ல மின்கடத்தியாகும். இது உயர் செஞ்சூட்டு வெப்பநிலையில் மக்னீசியம் ஆக்சைடு புகையை வெளியிட்டவாறு காற்றில் எரிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zinc 68 Metal Isotope". By American Elements. பார்க்கப்பட்ட நாள் February 17, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "ZINC-68METAL". By Cambridge Isotop Laboratories. Archived from the original on அக்டோபர் 3, 2013. பார்க்கப்பட்ட நாள் February 17, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாகம்-68&oldid=3558736" இலிருந்து மீள்விக்கப்பட்டது