தீபிகா படுகோண்
தீபிகா படுகோண் Deepika Padukone | |
---|---|
பிறப்பு | சனவரி 5, 1986 கோபனாவன், டென்மார்க் |
தொழில் | விளம்பர அழகி, நடிகை |
நடிப்புக் காலம் | 2004–இன்று |
துணைவர் | ரன்வீர் சிங் |
தீபிகா படுகோண் (Deepika Padukone, பிறப்பு: 5 சனவரி 1986) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையும், விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். டென்மார்க்கின் தலைநகரமான கோபென்செனில் (Copenhagen) உச்சலா படுகோண் மற்றும் பிரகாசு படுகோண் தம்பதிகளுக்கு பிறந்தார். இவரின் தந்தையான பிரகாசு படுகோண் ஓர் புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்காரர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது ஒப்பனையழகித் தொழில் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் மற்றும் ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படத்தின் மூலம் பிரபலமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]படுகோண் உச்சாலா மற்றும் பிரகாசு படுகோண் ஆகியோருக்கு சனவரி 5, 1986 இல் டென்மார்க்கின் தலைநகரமான கோபென்செனில் (Copenhagen) உச்சலா படுகோண் மற்றும் பிரகாசு படுகோண் தம்பதிகளுக்கு பிறந்தார். இவருக்கு சுமார் ஒரு வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் பெங்களூருக்கு நகர்ந்தது.[1] இவரது பெற்றோர் இந்தியாவில், கர்நாடகாவில், உடுப்பி மாவட்டத்தில் குண்டபுரா தாலுகாவில் உள்ள படுகோண் என்ற கிராமத்திலிருந்து வந்தனர்.[2] இவரது தந்தை பிரகாசு சர்வதேச அளவில் மதிப்புள்ள பூப்பந்தாட்ட வீரர் மற்றும் தாய் ஒரு பயண முகவர். படுகோணுக்கு 1991 இல் பிறந்த அனிசா என்ற இளைய தங்கையும், 1993 இல் பிறந்த ஒரு சகோதரனும் உள்ளனர்.[3][4]
படுகோண் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியிலும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.[5] இவர் உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்பொழுதே தன் தந்தையை போல மாநில அளவில் பூப்பந்தாட்டம் விளையாடினார் மற்றும் இவரது தந்தையின் பூந்தாட்ட சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.[6][7]
விளம்பரத் துறை
[தொகு]கல்லூரியில் படிக்கும் பொழுதே, படுகோண் விளம்பரத் துறையையில் கவனம் செலுத்தினார்.[8] பல ஆண்டுகளாக, இவர் விளம்பரம் செய்த இந்திய வர்த்தக குறிகளின் பெயர்கள் லிரில், டாபர் லால் பவுடர், குளோஸ் அப் டூத் பேஸ்ட் (close up tooth paste) மற்றும் லிம்கா, மற்றும் இந்திய நகைகளின் சில்லறை வர்த்தக நகைக்கான விளம்பர நிகழ்ச்சிகளிலும் வியாபார தூதராகவும் தோன்றினார்.[9] கிங்க்ஃபிசரின் ஐந்தாவது ஆண்டு ஃபேசன் விருதுகளில் இந்த ஆண்டு மாடல் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு, இவர் கிங்க்ஃபிசரின் ஒரு மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கூட்டு நிறுவனமான யுனைடெட் ப்ரூவரீசு குழுமத்தால் (United Breweries Group) நீச்சலுடைகளின் மாதிரிகளைக் கொண்ட வருடாந்திர கிங்ஃபிசர் நாட்காட்டியானது 2003 முதல் 2021 வரை 19 ஆண்டுகளாக வெளியிட்டது.[10][11]
திரைத்துறை
[தொகு]விளம்பரத்துறையில் வெற்றிக்கண்ட படுகோண் பிறகு நடிப்பு திரைக்கு சென்றார். படுகோண் தனது திரைப்பட வாழ்க்கையை 2006 இல் வெளியான ஐசுவர்யா என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். விளம்பர மாதிரியுருவாக இருந்த படுகோணைக் கண்ட இயக்குநர் ஃபராஹ் கான் தான் இயக்கவிருத்த ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படத்திற்காக படுகோணை தேர்வு செய்தார். இதுவே படுகோணின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். இது 2007 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக அமைந்தது.[12]
சர்ச்சை
[தொகு]இவர் நடித்த பத்மாவதி படமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் திரௌபதி அம்மனை இழிவுப்படுத்தியதாக கருதி, சில அமைப்பினர் இந்தப் படத்திற்கும் இவருக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தீபிகா படுகோணின் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி தரப்படும் எனக்கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினர்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A smashing success". Newindpress.com. பார்க்கப்பட்ட நாள் 2005-06-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-16. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.
- ↑ "'I'm completely charmed by Ranbir'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chaturvedi, Vinita). பார்க்கப்பட்ட நாள் 2008-08-29.
- ↑ Jadolya, Harsh (2023-01-09). "सलमान के बिग बॉस में शाहरुख की एंट्री? पठान करेंगे फिल्म का प्रमोशन" (in இந்தி). Archived from the original on 2023-01-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
- ↑ http://entertainment.oneindia.in/celebrities/star-profile/deepika-padukone-profile-040907.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Transcript of LIVE CHAT with Model, Deepika Padukone at 12 noon on Thursday, March 3, 2005 in Mumbai". Indiatimes.com. Archived from the original on 2007-12-19. பார்க்கப்பட்ட நாள் 2005-03-03.
- ↑ "Deepika Padukone - Biography". DeepikaPadukone.com. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
- ↑ "Smash hit on the ramp". Indiatimes.
- ↑ Anik Banerjee, Abinaya Arangarajan (2023-06-22). "List of 28 Brands Endorsed by Deepika Padukone". Startuptalky. பார்க்கப்பட்ட நாள் 2024-09-30.
- ↑ "Kingfisher Swimsuit Calendar is now a thing of past". Times of India. 19 January 2022. https://timesofindia.indiatimes.com/life-style/fashion/buzz/kingfisher-swimsuit-calendar-is-now-a-thing-of-past/articleshow/88971034.cms.
- ↑ "Kingfisher Calendar". En Wikipedia. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
- ↑ Dohutia, Shabnam (2024-09-30). "Deepika Padukone". britannica.coma. பார்க்கப்பட்ட நாள் 2024-09-30.
- ↑ http://tamil.thehindu.com/india/article20583496.ece