பூப்பந்தாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூப்பந்தாட்டம் என்பது ஒரு பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்
[தொகு] ஆடு தளத்தின் அளவுகள்
13.4மீ 6.1மீ. நடுவில் 1.55மீட்டர் உயர வலை. ஷட்டில்காக் எனும் இறகு பந்து சுமார் 5கிராம் எடையில் ஒரு கார்க் துண்டில் 16 இறகுகள் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
[தொகு] ஆட்டக் கணக்கு (ஸ்கோர்)
ஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 15 புள்ளிகள் (பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் 11 புள்ளிகள்) எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும். ஒரு போட்டியாட்டத்தில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.
இருவர் ஆட்டத்தில் ஒருவர் முதலெறிதலில் (சர்வீஸ்) ஆட்டம் இழந்தால் இரண்டாம் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்குப் பின்னரே எதிர் அணிக்கு கொடுக்கப்படும்.
இரு அணிகளும் சமமாக 13 அல்லது 14 புள்ளிகள் வென்றெடுத்தால் முதலில் அந்தப் பாயிண்டை எடுத்த அணி விரும்பினால் 'செட்டிங்' எனப்படும் கூடுதல் ஆட்டம் (எக்ஸ்ட்ரா கேம்) ஆட வேண்டும்.