தீப்புண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீக்காயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீப்புண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Scaldburn.jpg
கையில் ஏற்பட்ட தீப்புண்
ICD-10 T20.-T31.
ICD-9 940-949
பாடத் தலைப்பு D002056

தீப்புண் (Burn) அல்லது தீக்காயம் என்பது ஒரு வகையான புண். இது நெருப்பு, மின்சாரம், இரசாயனம், கதிரியக்கம், அல்லது தேய்மானம் போன்ற காரணங்களால் உருவாகலாம்.[1][2][3] பெரும்பாலான தீப்புண்கள் தோல்களை மட்டுமே பாதிக்கின்றது. மிக சில தருணங்களில் மட்டுமே ஆழமான, தசைகளை, எலும்புகளை மற்றும் இரத்த குழாய்களை பாதிக்கக்கூடிய புண்கள் ஏற்படுகின்றது. சாதாரண தீப்புண்களை முதலுதவியின் மூலமாக சரிசெய்து விடலாம். முடியாத பட்சத்தில் மருத்துவமமனைக்குச் சிகிச்சைக்காக செல்லலாம்.

தீப்புண்பட்டவர்கள் பொதுவாக வலியால் அவதியுறுவார்கள். சில நேரங்களில் தீவிரமான தீப்புண் அடைந்தவர்கள் வடு, ஊனம் அல்லது மரணம் போன்ற பெருங்கொடுமைகளையும் அடைய நேரிடும்.

பொருளடக்கம்

வகைப்படுத்தல் [தொகு]

தீப்புண்ணுடைய ஆழம், அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய புண்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

ஆழத்தின் அடிப்படையில் வகைப்படுத்துதல் [தொகு]

தற்போது, தீப்புண்கள் புண்ணின் ஆழத்தின் படி விவரிக்கப்படுகிறது. முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நிலை என்று வகைப்படுத்தப்படுகின்றன. பிரஞ்சு முடிதிருத்துனர் - அறுவை சிகிச்சை மருத்துவர் அம்ப்ராய்சு பிரே என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. என்றாலும், துல்லியமாக தீப்புண்ணின் ஆழத்தை தீர்மானிப்பது சிக்கலாகவே இருக்கிறது.

பின்வரும் அட்டவணையில் தீப்புண் நிலைகளும் உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

தீப்புண்ணின் மூன்று நிலைகள்
பெயர் நிலை தோற்றம் இழையமைப்பு வலி சரிசெய்வதற்கான காலம் சரிசெய்வதில் பிரச்சனை உதாரணம்
முதல் நிலை மேல்புறத்தோல் செந்தடிப்பு உலர்ந்தது வலி மிகுதி ஒரு வாரம் அல்லது அதற்கும் குறைவாக எதுவுமில்லை A sunburn is a typical first degree burn.
இரண்டாம் நிலை (மேலோட்டமான பகுதியளவு தடிப்பு) மேலோட்டமாக (சதைக்காம்புபோன்ற) அடித்தோல் வரை நீட்டிக்கப்பட்டது சிவந்தக் கொப்புளங்கள். அழுத்தும்போது வெளிறும் ஈரப்பசையுடன் உள்ளது வலி மிகுதி 2-3 வாரங்கள் உள்ளிட நோய்த்தொற்று/சீழ்ப்புரை

Second Degree Burn on Shoulder

இரண்டாம் நிலை (ஆழமான பகுதியளவு தடிப்பு) ஆழமாக (நுண்வலைய) அடித்தோல்வரை நீட்டிக்கப்பட்டது சிவந்த, வெண்ணிற இரத்த கொப்புளங்கள். குறைந்த வெளுப்பு. ஈரப்பசையுடன் உள்ளது வலி மிகுதி வாரங்கள் - மூன்றாம் நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்பு அதிகம் வடு, சுருக்கங்கள் (பாதிக்கப்பட்ட தோலை நீக்கி புதிய தோல் ஒட்டு போடுதல் தேவைப்படலாம்) Second-degree burn caused by contact with boiling water
மூன்றாம் நிலை (முழுமையானத் தடிப்பு) அடித்தோல்வரை முழுமையாக நீட்டிக்கப்பட்டது இறுகியது, வெண்ணிறம்/பழுப்பு உலர்ந்தது, தோல்போன்றது வலியின்மை தோல் நீக்கம் தேவை வடு, சுருக்கங்கள், உறுப்பு நீக்கம் Eight day old third-degree burn caused by motorcycle muffler.
நான்காம் நிலை சருமத்தினுள்-தோலுக்கடியிலுள்ள திசுக்கள், அதனடியிலுள்ள தசை, எலும்பு வரை நீட்டிக்கப்பட்டது கருப்புத் தோற்றம்; கருகிய தீப்பொருக்கு உலர்ந்தது வலியின்மை தோல் நீக்கம் தேவை உறுப்பு நீக்கம், குறிப்பிடத்தக்க அளவு செயல்முறை பழுதுபடல், சதையழுகக்கூடிய சாத்தியம், சில நேரங்களில் இறப்பு

இவற்றையும் பார்க்க [தொகு]

குறிப்புகள் [தொகு]

  1. medlineplus. "தீப்புண் - ஆங்கிலத்தில்". பார்த்த நாள் 2010-09-22.
  2. WebMD (January 7, 2009). "தீப்புண் பற்றிய தொகுப்பு- ஆங்கிலத்தில்". முதலுதவி மருத்துவம் - ஆங்கிலத்தில். பார்த்த நாள் 2010-09-22.
  3. Total Burn Care, 3rd Edition, Edited by David Herndon, Saunders, 2007.

மேலும் படிக்க [தொகு]

ஹெர்ன்டான், டேவிட் (2007). தீக்காயம் பற்றிய ஆங்கிலப்புத்தகம். Saunders. ISBN 978-1-4160-3274-8. 

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தீப்புண்&oldid=1368556" இருந்து மீள்விக்கப்பட்டது