தி. த. கிருஷ்ணமாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1962
பிரதமர்ஜவஹர்லால் நேரு
முன்னையவர்தொகுதி அமைக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)
சென்னை
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவஹர்லால் நேரு
முன்னையவர்தொகுதி அமைக்கப்பட்டது
பின்னவர்சென்னை தெற்கு, சென்னை வடக்கு என பிரிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1899
இறப்பு1974
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி (பொதுவாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி அல்லது டிடிகே )(1899-1974) இந்தியாவின் நிதியமைச்சராக 1956-1958 மற்றும் 1964-1966 ஆண்டுகளில் பொறுப்பு வகித்தவர். தமிழ் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த அவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அக்கல்லூரியின் பொருளியல் துறையில் வருகைதரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தாம் நிதியமைச்சராக இருந்த இருமுறையும் முழுமையும் இல்லாது பதவி விலகியவர்.

வாழ்க்கை[தொகு]

கிருஷ்ணமாச்சாரி ஓர் தொழில் முனைவராகத் தம் வாழ்வைத் துவங்கினார். பின்னாளில் டிடிகே குழுமம் என வளர்ச்சியுற்ற டிடி கிருஷ்ணமாச்சாரி & கோ என்ற தம் வணிக நிறுவனத்தை 1928ஆம் ஆண்டு நிறுவினார்.நிறுவனம் ஓரளவு நிலைபெற்ற பின்னர் 30களில் அரசியலில் ஈடுபட்டார். சென்னை சட்டமன்ற மக்களவைக்கு சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைந்து 1946ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.

அவர் நிதியமைச்சராக இருந்தபோது தொழில் வளர்ச்சிக்காக ஐடிபிஐ,ஐசிஐசிஐ,யூனிட் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் மூலதனம் மற்றும் இயக்கநிதி தேவைகளுக்கு அமைப்புகளை ஏற்படுத்தினார்.மூன்று எஃகு ஆலைகள் அமையவும்,நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகோலினார்.

இவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1957–1958
வார்ப்புரு:S-aft/check பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1964–1965
வார்ப்புரு:S-aft/check பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._த._கிருஷ்ணமாச்சாரி&oldid=3943835" இலிருந்து மீள்விக்கப்பட்டது