திரிபுராரிபட்லா இராமகிருட்டிண சாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. இராமகிருட்டிண சாத்திரி
பிறப்புதிரிபுராரிபட்லா இராமகிருட்டிண சாத்திரி
10 ஏப்ரல் 1914
பெதரவூர், தெனாலி வட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு21 மே 1998
தெனாலி, ஆந்திரப் பிரதேசம்
பணிநடிகர்

திரிபுராரிபட்லா இராமகிருட்டிண சாத்திரி அல்லது தி. இராமகிருட்டிண சாத்திரி ( தெலுங்கு: త్రిపురారిభట్ల రామకృష్ణ శాస్త్రి ) (10 ஏப்ரல் 1914 - 21 மே 1998) தெலுங்குத் திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் பிரபலமான மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சுமார் 12 படங்களில் நாரதர் வேடத்தில் நடித்து பிரபலமானார்.[1]

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள தெனாலி வட்டத்தின் பெதரவூரில் திரிபுராரிபட்லா இராகவையா- காமேசுவரம்மா ஆகியோருக்குப் பிறந்தார். தெனாலியின் இராம விலாச சபையில் சேர்ந்த இவர், 9 வயதில் குழந்தை நடிகராக நடிகத் தொடங்கினார்.[2] 1926 முதல் குண்டூரில் தண்டு வெங்கட கிருஷ்ணய்யாவின் பாலமித்ரா சபையில் சேர்ந்து ரோஷனாரா, கிருஷ்ண லீலாலு, ராமதாசு போன்ற நாடகங்களில் நடித்தார். மேலும், தென்னிந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தார்.

இவர் ஸ்தானம் நரசிம்ம ராவ், சிஎஸ்ஆர் ஆஞ்சநேயுலு ஆகியோருடன் நடித்தபோது, பிரபல திரைப்பட இயக்குனர் சித்ரபு நாராயண மூர்த்தி இவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டார். 1937இல் தனது மோகினி ருக்மாங்கதா திரைப்படத்தில் நடிக்க இவரை அழைத்தார். இவர் நாரதர் பாத்திரத்தை பக்தியுடன் சித்தரித்து பரந்த பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர், மார்க்கண்டேயர், தக்‌ஷயக்னம், பிரஹலாதன், மயில்ராவணன், சுமதி உட்பட 12 பல்வேறு நாடகங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேடைக்குத் திரும்பிய பெத்த வெங்கட ராவின் இராமாஞ்சநேய யுத்தம் என்ற நாடகத்தில் நாரதராக நடித்து நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் பில்வமங்களா, சிவயோகி, இராமதாசு, கபீர், நாரதர் என பல வேடங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றார். 1952ஆம் ஆண்டு புதுதில்லியில் ஜவகர்லால் நேருவுக்கு முன்பாக ஸ்தானம் நரசிம்ம ராவின் துலாபாரம் நாடகத்தில் பங்கேற்றார்.

இறப்பு[தொகு]

இவர் தெனாலியில் தனது மருமகன் வீட்டில் 21 மே 1998 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Apara Naradudu Tripuraribhatla Ramakrishna Sastry, Tholinati Gramophone Gayakulu, Modali Nagabhushana Sharma, Creative Links Publications, Hyderabad, 2010, pp. 18-9.
  2. Tripuraribhatla Ramakrishna Sastry, Nata Ratnalu, Dr. Mikkilineni Radhakrishna Murthy, Second edition, Sitaratnam Granthamala, Vijayawada, 2002, pp. 115-17.
  3. Tripuraribhatla Ramakrishna Sastry, Luminaries of 20th Century, Part II, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp. 514-5.

வெளி இணைப்புகள்[தொகு]