தியத்தலாவை தானைவைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியத்தலாவ தானைவைப்பு
Diyatalawa Garrison
தியத்தலாவை, ஊவா மாகாணம்
வகை இராணுவ தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தியத்தலாவை பிரதேசத் தலைமையகம்
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1885 – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை கெமுனு வாட்ச்

தியத்தலாவை தானைவைப்பு (Diyatalawa Garrison) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் உள்ள தானைவைப்பு நகரமான தியத்தலாவைச் சுற்றி அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் இராணுவ தளங்களைக் குறிப்பிடும் பொதுவான பெயராகும். சில நேரங்களில் இது தியத்தலாவை கண்டோன்மென்ட் என்று குறிப்பிடப்படுகிறது. இது இலங்கையின் பழமையான இராணுவ காவல்படைகளில் தானைவைப்புகளில் ஒன்றாகும். இலங்கை இராணுவ அகாதமி உட்பட இராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு அமைந்துள்ளன. இலங்கை இராணுவ மருத்துவப் படை தியத்தலாவவில் ஒரு ஆதார மருத்துவமனையைப் பராமரிக்கிறது. சலப தியதலாவை விமானப்படைத்தளம் இதன் அருகிலேயே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

போயர் போர் கைதிகள் முகாமில் இருந்து அஞ்சலட்டை 1900 இல் தியத்தலாவை போயர் போர் கைதிகள் முகாமில் இருந்து அஞ்சலட்டை

தியத்தலாவை எப்போது துருப்புக்களுக்கான பயிற்சி நிலையமாக மாறியது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் கிடைக்கக்கூடிய பதிவுகள் 1885 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவம் முதன்முதலில் ஒரு தானைவைப்பை நிறுவ தியத்தலாவை தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிகின்றன. தற்போது கெமுனு வாட்ச் துருப்புகள் கட்டுப்பாட்டிலுள்ள இம்பீரியல் முகாமில் அந்தக் காலத்தில் பயிற்சி நடத்தப்பட்டன. 1900 இல், பிரித்தானியர் போர் அலுவலகம் இரண்டாம் பூவர் போரில் சிறைபிடிக்கப்பட்ட பூவர் கைதிகளைத் தங்க வைப்பதற்காக தியத்தலாவையில் ஒரு வதை முகாமைக் கட்டியது. துவக்கத்தில் 2500 கைதிகள் மற்றும் 1000 காவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக்க் கட்டப்பட்டது. நாளடைவில் கைதிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்தது. முதலாம் உலகப் போரின் போது எதிரி நாட்டவர்களுக்குத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது.[1][2]

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் முகாம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆங்காங் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் ஜெர்மன் நாட்டவர்களும், சர்வதேச சட்டத்தை மீறி அசமா மாரு என்ற கப்பலிலிலுருந்து அகற்றப்பட்ட பல மாலுமிகளும் இங்கு தங்க வைக்கப்பட்டனர். 1941 சூனில், பெரும்பாலான மாலுமிகள் கனடாவுக்கு இடம் மாற்றப்பட்டனர். இத்தாலியப் போர்க் கைதிகளைத் தங்க வைக்க ஒரு பகுதியும் அமைக்கப்பட்டிருந்தது. ஜப்பானியர்கள் தீவின் மீது குண்டுவீசத் தொடங்கிய பிறகு, கைதிகள் 23 பிப்ரவரி 1942 அன்று பிரதான நிலப்பரப்பில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். ஆண்கள் பொதுவாக தோராதூனுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விடுதலைக்குப்பிறகு பிரித்தானிய இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் புதிதாக நிறுவப்பட்ட இலங்கை இராணுவத்தின் வசம் வந்தன. 1950 இல் நிறுவப்பட்ட இராணுவ ஆள்சேர்ப்பு பயிற்சி பணிமனையுடன் தியத்தலாவை இளம் இராணுவத்தினருக்கான முதன்மை பயிற்சி மைதானமாக ஆக்கப்பட்டது. இந்த இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சிப் பணிமனை பின்னர் இராணுவ பயிற்சி மையம். என்று பெயர் மாற்றப்பட்டது. இங்கு 1 வது களப் படை, இலங்கை பொறியாளர்கள் (1951), இலங்கை சின்ஹா படையணி (1956), ஜெமுனு வாட்ச் (1962) போன்ற இராணுவத்தின் பல படையணிகள் இங்குத் தங்கியிருந்தன.

தியத்தலாவையில் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்ட எச்.எம்.எஸ் ஊவா என்னும் ஓய்வு முகாமை அரச கடற்படை கொண்டிருந்தது. விடுதலைக்குப் பிறகு 1956 இல் ராயல் சிலோன் கடற்படையின் வசம் வந்தது. இது 1962 இல் கெமுனு வாட்ச் படையணியின் வசம் சென்றது.

இலங்கை இராணுவத்தின் ஏழு படைத்தலைமைகளில் இளம் படைத்தலைமைகமான மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் 14 மார்ச் 2013 அன்று, தியத்தலாவையில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் தியத்தலாவ பிரதேச தலைமையகமாகச் செயற்பட்டது.

இராணுவ பயிற்சித் தலைமையகம் (ARTRAC) 29 சனவரி 2012 அன்று தியத்தலாவாவையில் துவக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் கோட்பாட்டு அபிவிருத்தி மற்றும் பயிற்சி கண்காணிப்புக்கான தனி அமைப்பாக இது நிறுவப்பட்டது.

பயிற்சி மையங்கள்[தொகு]

  • இலங்கை இராணுவ அகாதமி
  • தன்னர்வலர் படை பயிற்சி பள்ளி
  • குறிசுடுநர் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியத்தலாவை_தானைவைப்பு&oldid=3958479" இலிருந்து மீள்விக்கப்பட்டது