தசையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசையியல் (Myology) என்பது தசைகளின் அமைப்பு, செயல்பாடு மற்றும் நோய்கள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் பிரிவாகும். [1] தசை அமைப்பில் எலும்புத் தசைகள், மென் தசைகள் இதயத் தசைகள் என மூன்று வகை தசைகள் உள்ளன. எலும்புத் தசை உடலின் பாகங்களை நகர்த்த அல்லது நிலைநிறுத்துவதற்காகச் சுருங்குகிறது (எ.கா., மூட்டுகளில் வெளிப்படும் எலும்புகள்), மென் தசை மற்றும் இதயத் தசைகள் திரவங்கள் மற்றும் உட்கொண்ட பொருட்களின் ஓட்டத்தை தூண்டும், வெளியேற்றும் அல்லது கட்டுப்படுத்துகின்றன.

மனித உடலில் எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் இணைந்து தசை மண்டலமும் உடலசைவிற்கு உதவுகிறது. தசைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் அவை உடல் அசைவிற்கு உதவுகின்றன. தசைகள் உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ளவும், உடல் நிலைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Scali-Sheahan, Maura (2010). Milady's Standard Professional Barbering (5th ed.). Clifton Park, N.Y.: Cengage Learning. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1435497153.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசையியல்&oldid=3635777" இலிருந்து மீள்விக்கப்பட்டது