டி மாவரின் வாய்ப்பாடு
கணிதத்தில், டி மாவரின் வாய்ப்பாடு (de Moivre's formula) என்பது,
ஆகும்.
இங்கு x ஒரு சிக்கலெண் (குறிப்பாக மெய்யெண்), n ஒரு முழு எண். பிரஞ்சு கணிதவியலாளர் ஆபிரகாம் டி மாவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் இவ்வாய்ப்பாடு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. சிக்கலெண்களையும் முக்கோணவியலையும் இணைப்பதால் இந்த வாய்ப்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
சில சமயங்களில் cos x + i sin x என்பது சுருக்கமாக cis x என குறிக்கப்படும்.
இதன் இடதுபுறத்தை விரித்து, ( x மெய்யெண் எனக்கொள்க.) இருபுறமும் உள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளை சமப்படுத்துவதன் மூலம் cos (nx) மற்றும் sin (nx) இவற்றுக்கான விரிவுக்கோவைகளைப் பெறாலாம். அக்கோவைகள் cos x மற்றும் sin x களால் ஆனவையாக இருக்கும். மேலும் இவ்வாய்ப்பாட்டின் பொதுமைப்படுத்தலைப் பயன்படுத்தி 1 ன் n ஆம் படி மூலங்களைக் ( n th roots of unity) காணலாம். அதாவது, zn = 1 என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் சிக்கலெண், z ன் மதிப்புகளைக் காணலாம்.
பொருளடக்கம் |
முழுஎண் அல்லாத அடுக்குகளுக்குப் பொருந்தாமை [தொகு]
டி மாவரின் வாய்ப்பாடு, அடுக்குகள் முழுஎண்களாக இல்லாவிட்டால் பொருந்தாது. முழுஎண்ணல்லாத அடுக்குகளையுடைய சிக்கலெண்களுக்கு பல மதிப்புகள் உண்டு. இவ்வாய்ப்பாட்டினைப் பொதுமைப்படுத்தலின் மூலம்
என்பது
ன் பல மதிப்புகளுள் ஒன்று என்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
n = ½ எனில் வாய்ப்பாட்டின்படி,
- x = 0 எனும்போது 1½ = 1,
- x = 2π எனும்போது 1½ = −1 என இரு மதிப்புகள் கிடைக்கின்றன.
கோணங்கள் 0 மற்றும் 2π இரண்டும் ஒன்றுதான் என்றாலும் அவை 1 மற்றும் -1 என்ற இரு வேறுபட்ட மதிப்புகளைத் தருகின்றன. பொதுமைப்படுத்தலும் 1ன் வர்க்கமூலங்கள் 1, -1 என்பதை உறுதிப்படுத்துகின்றது.
நிறுவுதல் [தொகு]
ஆய்லரின் வாய்ப்பாடு மூலம் [தொகு]
ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி டிமாவரின் வாய்ப்பாட்டை எளிதாக நிறுவலாம்.
ஆயிலர் வாய்ப்பாடு
முழுஎண்களுக்கான அடுக்கேற்ற விதிப்படி,
மீண்டும் ஆய்லர் வாய்ப்பாட்டின்படி,
அதாவது, 
கணிதத் தொகுத்தறிதல் முறை [தொகு]
டி மாவரின் வாய்ப்பாட்டினை ஒரு இயல் எண் அடுக்கிற்கு கணிதத் தொகுத்தறிதல் முறையில் நிறுவலாம். பின் அதன்மூலம் எல்லா முழு எண் அடுக்குகளுக்கும் நிரூபிக்கலாம்.
- இயல் எண் அடுக்கிற்கு
S(n): 
கணிதத் தொகுத்தறிதல் முறைப்படி n > 0, விற்கு முதலில் நிறுவலாம்.
S(1) என்பது தெளிவாக உண்மையென அறியலாம்.
S(k) உண்மையென எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது,
என்பது உண்மை.
இப்பொழுது
S(k+1):
அதாவது S(k) யிலிருந்து S(k+1) கிடைக்கப்பெறுகிறது.
எனவே கணிதத் தொகுத்தறிதலின் கொள்கையின்படி S(n) அனைத்து இயல் எண் அடுக்குகளுக்கும் உண்மையாகும்.
- பூச்சிய அடுக்கு
S(0): cos (0x) + i sin(0x) = 1 +i 0 = 1, இது உண்மை என்பது தெளிவு.
- எதிர்ம முழு எண் அடுக்கு
அடுக்கு, ஒரு எதிர்ம முழுஎண்ணாக இருக்கும்போது அதனை, -n என எடுத்துக் கொண்டு இவ்வாய்ப்பாட்டை நிறுவலாம். இங்கு n ஒரு இயல் எண்.
சமன்பாடு (*),
, (z = cos nx + i sin nx) என்ற முற்றொருமைச் சமன்பாட்டின் விளைவாகும்.
எனவே S(n), n இன் அனைத்து முழுஎண் மதிப்புகளுக்கும் உண்மையாகும்.
கொசைன் மற்றும் சைன் வாய்ப்பாடுகள் [தொகு]
டி மாவரின் வாய்ப்பாட்டின் இருபுறங்களிலும் உள்ள சிக்கலெண்களின் மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்தி கொசைன், சைன் வாய்ப்பாடுகளைக் காணலாம்.
x, cos x மற்றும் sin x, மெய்யெண்கள் எனில்,
இவை x சிக்கலெண்ணாக இருந்தாலும் பொருந்தும்.
குறிப்பாக, n = 2 , n = 3:
பொதுமைப்படுத்தல் [தொகு]
z மற்றும் w சிக்கலெண்களெனில்
, ஒரு பன்மதிப்புச் சார்பு. ஆனால்
அப்படியானதல்ல.எனவே
என்பது
ன் பல மதிப்புகளுள் ஒன்றாகும்.
பயன்பாடுகள் [தொகு]
இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி ஒரு சிக்கலெண்னின் n ஆம் படி மூலங்களைக் காணலாம்.
z என்ற சிக்கலெண் போலார் வடிவில் தரப்பட்டுள்ளது.
(k ஒரு முழுஎண்)
k க்கு 0 விலிருந்து n-1 வரையிலான மதிப்புகளை அளித்து z ன் n மூலங்களையும் பெறலாம்.
ஆகும்.


என்பது உண்மை.![\begin{alignat}{2}
\left(\cos x+i\sin x\right)^{k+1} & = \left(\cos x+i\sin x\right)^{k} \left(\cos x+i\sin x\right)\\
& = \left[\cos\left(kx\right) + i\sin\left(kx\right)\right] \left(\cos x+i\sin x\right) &&\qquad \text{by the induction hypothesis}\\
& = \cos \left(kx\right) \cos x - \sin \left(kx\right) \sin x + i \left[\cos \left(kx\right) \sin x + \sin \left(kx\right) \cos x\right]\\
& = \cos \left[ \left(k+1\right) x \right] + i\sin \left[ \left(k+1\right) x \right] &&\qquad \text{by the trigonometric identities}
\end{alignat}](http://upload.wikimedia.org/math/2/b/e/2be6f13c62d254c6c1624490e04e70f0.png)
![\begin{align}
\left(\cos x + i\sin x\right)^{-n} & = \left[ \left(\cos x + i\sin x\right)^n \right]^{-1} \\
& = \left[\cos (nx) + i\sin (nx)\right]^{-1} \\
& = \cos(-nx) + i\sin (-nx). \qquad (*) \\
\end{align}](http://upload.wikimedia.org/math/a/7/6/a76adc09fc4cd2c0fcfcaf4f80557a81.png)


, ஒரு
அப்படியானதல்ல.எனவே
(k ஒரு முழுஎண்)