டி மாவரின் வாய்ப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், டி மாவரின் வாய்ப்பாடு (de Moivre's formula) என்பது,

ஆகும்.

இங்கு x ஒரு சிக்கலெண் (குறிப்பாக மெய்யெண்), n ஒரு முழு எண். பிரஞ்சு கணிதவியலாளர் ஆபிரகாம் டி மாவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் இவ்வாய்ப்பாடு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. சிக்கலெண்களையும் முக்கோணவியலையும் இணைப்பதால் இந்த வாய்ப்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

சில சமயங்களில் cos x + i sin x என்பது சுருக்கமாக cis x என குறிக்கப்படும்.

இதன் இடதுபுறத்தை விரித்து, ( x மெய்யெண் எனக்கொள்க.) இருபுறமும் உள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளை சமப்படுத்துவதன் மூலம் cos (nx) மற்றும் sin (nx) இவற்றுக்கான விரிவுக்கோவைகளைப் பெறாலாம். அக்கோவைகள் cos x மற்றும் sin x களால் ஆனவையாக இருக்கும். மேலும் இவ்வாய்ப்பாட்டின் பொதுமைப்படுத்தலைப் பயன்படுத்தி 1 ன் n ஆம் படி மூலங்களைக் ( n th roots of unity) காணலாம். அதாவது, zn = 1 என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் சிக்கலெண், z ன் மதிப்புகளைக் காணலாம்.

முழுஎண் அல்லாத அடுக்குகளுக்குப் பொருந்தாமை[தொகு]

டி மாவரின் வாய்ப்பாடு, அடுக்குகள் முழுஎண்களாக இல்லாவிட்டால் பொருந்தாது. முழுஎண்ணல்லாத அடுக்குகளையுடைய சிக்கலெண்களுக்கு பல மதிப்புகள் உண்டு. இவ்வாய்ப்பாட்டினைப் பொதுமைப்படுத்தலின் மூலம் என்பது ன் பல மதிப்புகளுள் ஒன்று என்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு:

n = ½ எனில் வாய்ப்பாட்டின்படி,

x = 0 எனும்போது 1½ = 1,
x = 2π எனும்போது 1½ = −1 என இரு மதிப்புகள் கிடைக்கின்றன.

கோணங்கள் 0 மற்றும் 2π இரண்டும் ஒன்றுதான் என்றாலும் அவை 1 மற்றும் -1 என்ற இரு வேறுபட்ட மதிப்புகளைத் தருகின்றன. பொதுமைப்படுத்தலும் 1ன் வர்க்கமூலங்கள் 1, -1 என்பதை உறுதிப்படுத்துகின்றது.

நிறுவுதல்[தொகு]

ஆய்லரின் வாய்ப்பாடு மூலம்[தொகு]

ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி டிமாவரின் வாய்ப்பாட்டை எளிதாக நிறுவலாம்.

ஆய்லரின் வாய்ப்பாடு:

முழுஎண்களுக்கான அடுக்கேற்ற விதிப்படி,

மீண்டும் ஆய்லர் வாய்ப்பாட்டின்படி,

அதாவது,

கணிதத் தொகுத்தறிதல் முறை[தொகு]

டி மாவரின் வாய்ப்பாட்டினை ஒரு இயல் எண் அடுக்கிற்கு கணிதத் தொகுத்தறிதல் முறையில் நிறுவலாம். பின் அதன்மூலம் எல்லா முழு எண் அடுக்குகளுக்கும் நிரூபிக்கலாம்.

  • இயல் எண் அடுக்கிற்கு

S(n):

கணிதத் தொகுத்தறிதல் முறைப்படி n > 0, விற்கு முதலில் நிறுவலாம்.

S(1) என்பது தெளிவாக உண்மையென அறியலாம்.

S(k) உண்மையென எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

என்பது உண்மை.

இப்பொழுது

S(k+1):

அதாவது S(k) யிலிருந்து S(k+1) கிடைக்கப்பெறுகிறது.

எனவே கணிதத் தொகுத்தறிதலின் கொள்கையின்படி S(n) அனைத்து இயல் எண் அடுக்குகளுக்கும் உண்மையாகும்.

  • பூச்சிய அடுக்கு

S(0): cos (0x) + i sin(0x) = 1 +i 0 = 1, இது உண்மை என்பது தெளிவு.

  1. எதிர்ம முழு எண் அடுக்கு

அடுக்கு, ஒரு எதிர்ம முழுஎண்ணாக இருக்கும்போது அதனை, -n என எடுத்துக் கொண்டு இவ்வாய்ப்பாட்டை நிறுவலாம். இங்கு n ஒரு இயல் எண்.

சமன்பாடு (*), , (z = cos nx + i sin nx) என்ற முற்றொருமைச் சமன்பாட்டின் விளைவாகும்.

எனவே S(n), n இன் அனைத்து முழுஎண் மதிப்புகளுக்கும் உண்மையாகும்.

கொசைன் மற்றும் சைன் வாய்ப்பாடுகள்[தொகு]

டி மாவரின் வாய்ப்பாட்டின் இருபுறங்களிலும் உள்ள சிக்கலெண்களின் மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்தி கொசைன், சைன் வாய்ப்பாடுகளைக் காணலாம்.

x, cos x மற்றும் sin x, மெய்யெண்கள் எனில்,

பாகுபடுத்தல் தோல்வி (அறியப்படாத செயற்பாடு): {\displaystyle \begin{alignat}2 \cos(nx)&=\sum_{k=0}^{\lfloor n/2\rfloor}{\tbinom{n}{2k}}(-1)^k(\cos{x})^{n-2k}(\sin{x})^{2k}& &=\sum_{k=0}^{\lfloor n/2\rfloor}{\tbinom{n}{2k}}(\cos{x})^{n-2k}((\cos{x})^2-1)^k\\ \sin(nx)&=\sum_{k=0}^{\lfloor (n-1)/2\rfloor}{\tbinom{n}{2k+1}}(-1)^k(\cos{x})^{n-2k-1}(\sin{x})^{2k+1}& &=(\sin{x})\sum_{k=0}^{\lfloor(n-1)/2\rfloor}{\tbinom{n}{2k+1}}(\cos{x})^{n-2k-1}((\cos{x})^2-1)^k. \end{alignat}}

இவை x சிக்கலெண்ணாக இருந்தாலும் பொருந்தும்.

குறிப்பாக, n = 2 , n = 3:

பாகுபடுத்தல் தோல்வி (கூடுமாயின் MathML (சோதனை): Invalid response ("Math extension cannot connect to Restbase.") from server "http://localhost:6011/ta.wikipedia.org/v1/":): {\displaystyle \begin{alignat}2 \cos(2x) &= (\cos{x})^2 +((\cos{x})^2-1) &&= 2(\cos{x})^2-1\\ \sin(2x) &= 2(\sin{x})(\cos{x})\\ \cos(3x) &= (\cos{x})^3 +3\cos{x}((\cos{x})^2-1) &&= 4(\cos{x})^3-3\cos{x}\\ \sin(3x) &= 3(\cos{x})^2(\sin{x})-(\sin{x})^3 &&= 3\sin{x}-4(\sin{x})^3.\\ \end{alignat}}

பொதுமைப்படுத்தல்[தொகு]

z மற்றும் w சிக்கலெண்களெனில்

, ஒரு பன்மதிப்புச் சார்பு. ஆனால்
அப்படியானதல்ல.எனவே

என்பது ன் பல மதிப்புகளுள் ஒன்றாகும்.

பயன்பாடுகள்[தொகு]

இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி ஒரு சிக்கலெண்னின் n ஆம் படி மூலங்களைக் காணலாம்.

z என்ற சிக்கலெண் போலார் வடிவில் தரப்பட்டுள்ளது.

(k ஒரு முழுஎண்)

k க்கு 0 விலிருந்து n-1 வரையிலான மதிப்புகளை அளித்து z ன் n மூலங்களையும் பெறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_மாவரின்_வாய்ப்பாடு&oldid=2744843" இலிருந்து மீள்விக்கப்பட்டது