டிரிஷ் சிரேடியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்ரிசியா அன்னே சிரேடியஸ் (Patricia Anne Stratigeas (/ˈstrætɪiəs/; பிறப்பு டிசம்பர் 18, 1975); என்பவர் கனடாவைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர், உடற்பயிற்சி வடிவழகி மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார் .மல்யுத்த மேடைப் பெயரான டிரிஷ் சிரேடியஸ் என்பதன் மூலம் பரவலாக அரியப்பட்டார்

உடற்பயிற்சி வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், ஸ்ட்ராட்டீஜஸ் உலக மல்யுத்த கூட்டமைப்பில் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் இது உலக மகிழ்கலை நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இவர் ஒரு முறை ஹார்ட்கோர் வாகையாளராகவும், மூன்று முறை உலக மகிழ்கலை நிறுவனத்தின் ஆண்டின் சிறந்த பெண் மல்யுத்த வீராங்கனையாகவும் அறிவிக்கப்பட்டார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இந்த தொழில்முறை மல்யுத்தத்தில் கலந்துகொண்டார். பின் ஸ்ட்ராடஸ் செப்டம்பர் 17, 2006 அன்று உலக மகிழ்கலை நிறுவனம் அன்ஃபோர்கிவனுடன் தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்தப் போட்டியில் ஏழாவது முறையாக உலக மகளிர் வாகையாளராக பட்டம் பெற்றார்.

இவர்உலக மகிழ்கலை நிறுவனத்தில் அவ்வப்போது தோன்றுவார். 2011 ஆம் ஆண்டில், ஸ்ட்ராடஸ் உலக மகிழ்கலை நிறுவனம் டஃப் இனாஃப் இன் பயிற்சியாளராக இருந்தார். 2013 ஆம் ஆண்டில் உலக மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேமில் அதன் வரலாற்றில் இளைய உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், இவர்2018 மகளிர் ராயல் ரம்பிளில் பங்கேற்று உலக மகிழ்கலை நிறுவனத்திற்குத் திரும்பினார். பின்னர் இவர் பெண்கள் பிரிவில் நடைபெற்ற அனைத்து முக்கிய மல்யுத்தப் போட்டிகளிலும் இவர் பங்குபெற்றார். மிக்கி ஜேம்ஸ் மற்றும் அலிசியா ஃபாக்ஸுக்கு எதிரான இணை வாகையாளர் போட்டியில் லிதாவுடன் இணைந்து போட்டியிட்டார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்மர் சிலாம் நிகழ்ச்சியில் இவர் ரிக்பிளயரின் மகளான சார்லோட் பிளேயருக்கு எதிராக போட்டியிட்டார்.

தொழில்முறை மல்யுத்தத்தைத் தவிர, ஸ்ட்ராடஸ் பல பத்திரிகை அட்டைகளில் வடிவழகியாகத் தோன்றியுள்ளார் மற்றும் தொண்டு வேலைகளில் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளார். இவர் பல விருது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார் மற்றும் யோகா ஸ்டுடியோவை என்பதனை சொந்தமாக நடத்தி வந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஸ்ட்ராடிஜியாஸ் கனடாவின் ஒன்ராறியோவின் டொராண்டோவில் வளர்ந்தார், அங்கு இவர் பேவியூ மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் .[1][2] யார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கு இவர்உயிரியல் மற்றும் கினீசியாலஜி படித்தார் மற்றும் கால்பந்து மற்றும் பீல்ட் ஹாக்கி போன்ற விளையாட்டுகளையும் விளையாடினார்.[3] 1997 இல் ஆசிரிய வேலைநிறுத்தம் காரணமாக, இவர்தனது வாழ்க்கைத் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இவர் ஒரு உள்ளூர் உடர் பயிற்சிக் கூடத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தபோது, பத்திரிகைக்கு ஒரு மாதிரி படக் காட்சியமைப்பு செய்வதற்காக மஸல் மேக் இன்டர்நேஷனல் வெளியீட்டாளரை அனுகினார் .[4] பின்னர் இவர் மே 1998 இதழின் அட்டைப்படத்தில் தோன்றினார். அதன்பின்பு இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அடுத்த ஆறு மாதங்களில் ஏராளமான பத்திரிகை அட்டைகளில் வடிவழகியாகத் தோன்றினார். இந்த நேரத்தில், இவர் டொராண்டோ ஸ்போர்ட்ஸ் ரேடியோ, தி ஃபேன் 590 இல் லைவ் ஆடியோ போன்ற மல்யுத்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராப்க பணியில் சேர்ந்தார்.[5][6]

ஸ்ட்ராடிஜியாஸ் சிறுவயதிலிருந்தே மல்யுத்தப் போட்டிகளின் ரசிகராக இருந்தார், குறிப்பாக மல்யுத்த வீரர்களான ஹல்க் ஹோகன் மற்றும் ராண்டி சாவேஜ் ஆகியோரின் ரசிகையாக இருந்து வந்தார்.[7] அவரது வடிவழகு பணி உலக மல்யுத்த கூட்டமைப்பின் கவனத்தை ஈர்த்தது.[1][5][6][8][9] நவம்பர் 1999 இல், இவர் நிறுவனத்துடன் பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இவர் ரான் ஹட்ச்சன் என்பவரால் பயிற்சி பெற்றார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Trish Stratus". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் August 6, 2007.
  2. 2.0 2.1 Mandel, Michele (March 16, 2002). "Richmond Hill's Trish Stratus mat star". Toronto Sun. Canadian Online Explorer. Archived from the original on ஜூலை 13, 2012. பார்க்கப்பட்ட நாள் August 6, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Out of the Stratusphere". Wrestling Digest இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 8, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070808085651/http://www.lethalwow.com/history/article26.htm. பார்த்த நாள்: August 26, 2007. 
  4. "Trish Stratus – Bio – Print". TrishStratus.com. Archived from the original on May 20, 2007. பார்க்கப்பட்ட நாள் August 8, 2007.
  5. 5.0 5.1 Madigan, TJ (October 27, 2005). "Everybody wants to know, Trish ..." Calgary Sun. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் August 25, 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 Lee, Benson (August 30, 2000). "Trish finds WWF 'challenging', bumps 'exhilarating'". Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் August 18, 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "11 Things You Didn't Know About WWE Hall Of Famer Trish Stratus". October 2, 2014.
  8. "40 fast facts: Trish Stratus". Wrestling Digest இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 8, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070808101748/http://www.lethalwow.com/history/article27.htm. பார்த்த நாள்: August 26, 2007. 
  9. Baines, Tim (April 13, 2002). "Beauty, brains, talent and sense of humour push WWE diva to top". Ottawa Sun. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் August 18, 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரிஷ்_சிரேடியஸ்&oldid=3843487" இலிருந்து மீள்விக்கப்பட்டது