ஜோக்கர் துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோக்கர் துளசி
பிறப்புதுளசி
சென்னை
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976-2004
குறிப்பிடத்தக்க படைப்புகள்மருது பாண்டி
உடன் பிறப்பு
தமிழச்சி
இளைஞர் அணி
அவதார புருஷன்
சொந்த ஊர்சென்னை
தொலைக்காட்சிகோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி

ஜோக்கர் துளசி (Joker Thulasi) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறார். 11 ஏப்ரல் 1976 இல் வெளியான தேவராஜ்-மோகன் இயக்கிய தமிழ் திரைப்படமான “உங்களில் ஒருத்தி” படத்தில் துளசி அறிமுகமானார். ஒரு மூத்த நடக நடிகராகவும், திரைப்பட நடிகராகவும் பல தசாப்தங்களாக இருந்துவருகிறார். இவர் கீழ்கண்ட நன்கு அறியப்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளார்; தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் . பல படங்களில் இவரது நடிப்பு குறிப்பாக " திருமதி பழனிச்சாமி " இல் பாராட்டப்பட்டது, இது 1992 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் அது ஒன்றாகும்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் தமிழ்நாட்டின், சென்னையில் பிறந்தார். ஆரம்ப நாட்களில், இவர் நாடக நடிகராக இருந்தார். சென்னையில் உள்ள கண்மணி நாடகக் குழுவின் முதல் நடிகர் இவர் ஆவார். பின்னர், இவர் உங்களில் ஒருதி திரைப்படத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

மனோஜ் குமார் இயக்கிய ராம்கி மற்றும் சீதா ஆகியோருடன் தமிழ் திரைப்படமான “ மருது பாண்டி ” படத்தில் துளசி முன்னணி நடிகராக நடிகராக அறிமுகமானார்.[3]

தொலைக்காட்சி வாழ்க்கை[தொகு]

துளசி தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். அவரது குறிப்பிடத்தக்க தொடர்கள்

திரைப்படவியல்[தொகு]

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

ஆண்டு படம் பாத்ததிரம் குறிப்புகள்
1976 உங்களில் ஒருத்தி
1976 மன்மத லீலை
1982 பட்டணத்து ராஜாக்கள்
1987 இது ஒரு தொடர்கதை
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பைத்தியக்காரன்
1990 நம்ம ஊரு பூவாத்தா
1990 மருது பாண்டி
1990 நாங்கள் புதியவர்கள்
1991 சித்திரைப் பூக்கள்
1991 மரிக்கொழுந்து
1992 திருமதி பழனிச்சாமி
1992 சாமுண்டி
1993 மறவன்
1993 உடன் பிறப்பு பிச்சைக்காரன்
1993 உள்ளே வெளியே
1994 இளைஞர் அணி
1994 செவத்த பொண்ணு
1995 தமிழச்சி
1995 சின்ன மணி
1995 சிந்துபாத்
1995 நீலக்குயில்
1995 மண்ணைத் தொட்டு கும்பிடணும்
1996 கட்டபஞ்சாயத்து
1996 அவதார புருஷன்
1996 வாழ்க ஜனநாயகம்
1996 புருஷன் பொண்டட்டி
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1997 ரட்சகன்
1998 மூவேந்தர்
1998 புதுமைப்பித்தன்
1999 அடுத்தக் கட்டம்
2000 நீ எந்தன் வானம்
2004 ஏய்

குறிப்புகள்[தொகு]

  1. "Joker Thulasi". Onenov (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-06. Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  2. "Telugu Tv Actor Joker Thulasi Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  3. kalyani (2017-06-11). "Joker Thulasi [Comedian]". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோக்கர்_துளசி&oldid=3707571" இலிருந்து மீள்விக்கப்பட்டது