திஃசொங்கா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜொங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜொங்கா மொழி Dzongkha |
||
|---|---|---|
| நாடுகள்: | பூட்டான் , சிக்கிம் (இந்தியா) | |
| பேசுபவர்கள்: | முதல் மொழி: 130,000 இரண்டாம் மொழி ~470,000 |
|
| மொழிக் குடும்பம்: | சீன-திபெத்தியம் திபெத்திய-பர்மியம் இமாலயம் திபெத்திய-கானோரி திபெத்தியம் ஜொங்கா மொழி Dzongkha |
|
| எழுத்து முறை: | திபெத்தியம் | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | பூட்டான் | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | dz | |
| ISO 639-2: | dzo | |
| ISO/FDIS 639-3: | dzo | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஜொங்கா (Dzongkha) பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும். "ஜொங்கா" என்றால் ஜொங் என்ற இடங்களில் பேசப்படும் மொழி (கா) என்பது கருத்து. 17ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பூட்டானில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் ஜொங் என அழைக்கப்படுகிறது.
ஜொங்கா மொழி தற்போதைய திபெத்திய மொழியின் உறவு மொழியாகும். 1960கள் வரையில் பௌத்த சமயத் துறவிகளால் திபெத்திய மொழியே கல்வி மொழியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஜொங்கா மொழி பாடசாலைகளில் முதல் மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பூட்டான் பாடசாலைகளில் ஜொங்கா மொழி கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் காலிம்பொங் நகர மக்கள் ஜொங்கா மொழியைப் பேசி வருகின்றனர். இந்நகரம் முன்னர் பூட்டானுடன் இணைக்கப்பட்டிருந்தது.