ஜி. எச். ஹார்டி
| ஜி.எச். ஹார்டி (G. H. Hardy) | |
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 7, 1877 |
| பிறப்பிடம் | க்ரான்லே, சர்ரே, இங்கிலாந்து |
| இறப்பு | திசம்பர் 1 1947 (அகவை 70) |
| இறப்பிடம் | கேம்பிரிச், கேம்பிரிட்ச்ஷைர், இங்கிலாந்து |
| தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
| துறை | கணிதம் |
| பணி நிறுவனம் | திரித்துவக் கல்லூரி, கேம்பிரிச் |
| கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | ஏ.இ.எச். லவ் ஈ.டி. விட்டேக்கர் |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
மேரி கார்ட்ரைட் சிட்னி சாப்மான் ஐ. ஜே. குட் எட்வர்ட் லின்ஃபுட் பிராங்க் மோர்லீ சிரில்.ஓஃப்ஃபோர்ட் ஹாரி பிட் ரிச்சர்ட் ராடோ சீனிவாச இராமானுசன் ராபர்ட் அலக்சாண்டர் ராங்கின் டானல்ட் ஸ்பென்சர் எட்வர்ட் டிச்மார்ஷ் திருக்கண்ணபுரம் விஜயராகவன் ஈ.எம். றைட் |
| அறியப்படுவது | ஹார்டி-வைன்பெர்க் தத்துவம் முழு எண் பிரிவினை; ஹார்டி-இராமானுசன் தேற்றம் இராமானுசனின் குரு |
| தாக்கம் | கமீல் ஜோர்டன் |
| பின் பற்றுவோர் | சீனிவாச இராமானுசன் |
| மதம் | இறைமறுப்பாளர் |
ஜி.எச். ஹார்டி (Godfrey Harold “G. H.” Hardy) (பிறப்பு: பெப்ரவரி 7, 1877; இறப்பு: திசம்பர் 1, 1947)[1][2] என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.[3][4]
பொருளடக்கம் |
கணித அழகியல் பற்றிய கட்டுரை [தொகு]
கணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, ஜி.எச். ஹார்டி தாம் 1940இல் கணித அழகியல் பற்றி எழுதிய "ஒரு கணித அறிஞனின் தன்னிலை விளக்கம்" (A Mathematician's Apology) என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார். கணிதத்தில் சிறப்பு அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் ஹார்டி ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை வழங்கியுள்ளார்.
ஹார்டியும் இந்தியக் கணித மேதை இராமானுசனும் [தொகு]
1914இலிருந்து ஹார்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாசன் இராமானுசனுக்கு குருவாகவும் ஆசானாகவும் விளங்கினார். அந்த இரு பேரறிஞர்களுக்கு இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது.[5][6] இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஹார்டி அவருடைய அதிசயமான கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார். இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் தத்துவங்கள் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஹார்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர்.
கணிதத் துறைக்கு ஹார்டியின் பெரும் பங்களிப்பு [தொகு]
பவுல் ஏர்டோஸ் (Paul Erdős) என்பவர் ஒருமுறை ஹார்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது, கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார். அதற்கு ஹார்டி அளித்த பதில், "இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு" என்பதாகும். மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம் "வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு ஒரு நிகழ்ச்சி" என்று ஹார்டி கூறியுள்ளார்."[5][7]
நூற்பட்டியல் [தொகு]
- Hardy, G. H. (1940). A Mathematician's Apology. Cambridge: University Press. ISBN 978-0521427067 (2004 reissue)..
- Hardy, G. H. (1940) Ramanujan, Cambridge University Press: London (1940). Ams Chelsea Pub. (November 25, 1999) ISBN 0-8218-2023-0.
- Hardy, G. H.; Wright, E. M. (2008) [1938]. Heath-Brown, D. R.; Silverman, J. H.. eds. An Introduction to the Theory of Numbers (6th ed.). Oxford: Oxford University Press. ISBN 978-0199219858. http://www.oup.com/uk/catalogue/?ci=9780199219858.
- Hardy, G. H. (1952) [1908]. A Course of Pure Mathematics (10th ed.). Cambridge: University Press. ISBN 978-0521720557 (2008 reissue)
- Hardy, G. H. (1949). Divergent Series. Oxford: Clarendon Press. xvi+396. ISBN 978-0821826492
- Hardy, G. H.; London Mathematical Society (1966). Collected papers of G.H. Hardy; including joint papers with J.E. Littlewood and others. Oxford: Clarendon Press. ISBN 0198533403. OCLC 823424.
- Hardy, G. H.; Littlewood, J. E.; Pólya, G. (1952) [1934]. Inequalities (2nd ed.). Cambridge: Cambridge University Press. ISBN 978-0521358804. http://www.cambridge.org/catalogue/catalogue.asp?isbn=9780521358804.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedfrs - ↑ GRO Register of Deaths: DEC 1947 4a 204 Cambridge – Godfrey H. Hardy, aged 70
- ↑ O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜி. எச். ஹார்டி", MacTutor History of Mathematics archive, University of St Andrews, http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Hardy.html.
- ↑ ஜி. எச். ஹார்டி at the Mathematics Genealogy Project
- ↑ 5.0 5.1 THE MAN WHO KNEW INFINITY: A Life of the Genius Ramanujan. Retrieved December 2, 2010.
- ↑ "20TH CENTURY MATHEMATICS – HARDY AND RAMANUJAN". பார்த்த நாள் 2010-12-02.
- ↑ Freudenberger, Nell (16 September 2007). "Lust for Numbers". The New York Times. http://www.nytimes.com/2007/09/16/books/review/Freudenberger-t.html?pagewanted=print. Retrieved 2010-12-02.
மேல் ஆய்வுக்கு [தொகு]
- Kanigel, Robert (1991). The Man Who Knew Infinity: A Life of the Genius Ramanujan. New York: Washington Square Press. ISBN 0671750615
- Snow, C. P. (1967). Variety of Men. London: Macmillan
வெளி இணைப்புகள் [தொகு]
- Quotations of G. H. Hardy
- Hardy's work on Number Theory
- வார்ப்புரு:ScienceWorldBiography
- I. Grattan-Guinness, "The interest of G.H. Hardy, F.R.S. in the philosophy and the history of mathematics