ஜக்கூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்கூர் ஏரி
புறநகர்
ஜக்கூர் ஏரி
ஜக்கூர் ஏரி
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
Metroபெங்களூர்
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560064

ஜக்கூர் ஏரி[1] (Jakkur Lake) என்பது இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இது நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி ஜக்கூர் என்ற இடத்தின் பெயரிலிருந்து இதன் பெயரைப் பெற்றது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 35 ha (86.5 ஏக்கர்கள்) ஆகும். இந்த ஏரியில் பல தீவுகள் உள்ளன. காவிரி நீர் கிடைக்காத அருகிலுள்ள கிராமங்களுக்கு இந்த ஏரி குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.[2] இந்த ஏரியானது மற்ற நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகளை அதிக அளவில் ஈர்த்து வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.[3] சூழல் மாசுபாட்டிலிருந்து, ஏரி புத்துயிர் பெற்றதிலிருந்து, ஏரியில் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கூழைக்கடா போன்ற நீர்ப் பறவைகள் கூடு கட்டத்தொடங்கியுள்ளன.[4]

ஜக்கூர் ஏரியின் காட்சி
ஜக்கூர் ஏரியில் கூழைக்கடா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கூர்_ஏரி&oldid=3584671" இலிருந்து மீள்விக்கப்பட்டது