சோழவந்தான் தொடருந்து நிலைய வெடி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழவந்தான் தொடருந்து நிலைய வெடி விபத்து என்பது தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தொடருந்து நிலையத்தில் நிகழ்ந்தது. தொடக்கத்தில் குண்டு வெடிப்பு நிகழ்வாக கருதப்பட்ட இந்த நிகழ்வு, விசாரனைக்குப் பிறகு வெடிவிபத்து என்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்வு[தொகு]

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் நாள் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் சோழவந்தானைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி பரமசிவம் என்ற‌ அறுபது வயதான நபரும், வெடி வியாபாரி ராமர் என்ற முப்பத்து ஐந்து வயதான நபரும் உயிரிழந்தனர். [1]

விபத்து[தொகு]

தொடக்கத்தில் இந்த நிகழ்வு குண்டு வெடிப்பு என்று கருதப்பட்டது. பின்பு காவல்துறை விசாரணையில் அம்பாத்துறையில் இருந்து சோழவந்தான் ரயில் நிலையத்துக்கு வந்த சரக்கில் தீபாவளி விற்பனைக்கான பட்டாசுகள் இருந்ததாகவும், சரக்குகளை இறக்கும்போது பட்டாசுகள் வெடித்ததாகவும் கண்டறியப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. சோழவந்தான் ரயில் நிலைய வெடிவிபத்து: இருவர் கைது  | தினமணி - 07 அக்டோபர் 2009