சோழவந்தான் தொடருந்து நிலையம்
சோழவந்தான் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | 29பி சோழவந்தான் சாலை, சோழவந்தான், மதுரை, தமிழ்நாடு - 625214 இந்தியா |
ஆள்கூறுகள் | 10°01′22″N 77°57′55″E / 10.0228°N 77.9654°E |
ஏற்றம் | 169 மீட்டர் |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
நடைமேடை | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | SDN |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | மதுரை |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
மின்சாரமயம் | ஆம் |
அமைவிடம் | |
சோழவந்தான் தொடருந்து நிலையம் (Sholavandan railway station, நிலையக் குறியீடு:SDN) இந்தியாவின் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்திலுள்ள, சோழவந்தானில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
இது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது.
அமைவிடம்[தொகு]
மதுரைக்கு வடமேற்கே 16 மைல் தொலைவில் உள்ள வைகை ஆற்றின் இடது கரையில் சோழவந்தன் அமைந்துள்ளது. சோழவந்தன் தொடருந்து நிலையத்தில் அனைத்து பயணிகள் தொடருந்துகளும், மதுரை - பெங்களூர் விரைவுத் தொடருந்து, வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி, மற்றும் நெல்லை அதிவிரைவு வண்டியும் நின்று செல்கிறது.[1][2]
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்[தொகு]
- கூடல்நகர் தொடருந்து நிலையம், 17 கி.மீ (11 மைல்)
- மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், 19 கி.மீ (12 மைல்)
- திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையம், 37 கி.மீ (23 மைல்)
- பழனி தொடருந்து நிலையம், 69 கி.மீ (43 மைல்)
இந்நிலையத்திலிருந்து 34.5 கிலோமீட்டர் (21.4 மைல்) தொலைவில் உள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.
வழித்தடங்கள்[தொகு]
இந்நிலையத்திலிருந்து இரண்டு வழித்தடங்கள் செல்கின்றன: சென்னை மற்றும் பெங்களூர் வழியாக வடக்கே ஒற்றை அகலப்பாதை மற்றும் மதுரை மற்றும் கன்னியாகுமரி வழியாக தெற்கே ஒற்றை அகலப்பாதை செல்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indian Railway Information". பார்க்கப்பட்ட நாள் 2014-06-16.
- ↑ "Indian Government Railway projects". பார்க்கப்பட்ட நாள் 2014-09-10.