சோரா
சோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்ற பெருமை கொண்டது.
2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].
19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
[தொகு] புவியியல்
சோரா என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது
சோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி (Khasi) மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது.
[தொகு] காலநிலை
சோராவின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீட்டர். சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Famous Cherrapunjee gets new name - Sohra" (in (ஆங்கிலத்தில்)). 2007-08-04. http://www.dnaindia.com/india/report_famous-cherrapunjee-gets-new-name-sohra_1113482. Retrieved 14 அக்டோபர் 2009.