சைகைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைகைட்டு.

சைகைட்டு (Zykaite) என்பது Fe3+4(AsO4)3(SO4)(OH)•15(H2O). என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். சாம்பலும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும் இக்கனிமத்தில் ஆர்சனிக், ஐதரசன், இரும்பு, கந்தகம் மற்றும் ஆக்சிசன் முதலான தனிமங்கள் காணப்படுகின்றனFe3+4(AsO4)3(SO4)(OH)·15(H2O).[1]. மங்கலான இக்கனிமம் மிக மென்மையானது ஆகும். மோவின் அளவுகோலில் இக்கனிமத்தின் கடினத்தன்மை அளவு 2 மற்றும் நீர் ஒப்படர்த்தி அளவு 2.5 ஆகும். ஒளிகசியும் பண்பு கொண்ட இக்கனிமம் செஞ்சாய்சதுர படிகத்திட்டத்தின் படி படிகமாகிறது[2].

லைமோனைட்டு, ஜிப்சம், இசுகோரொடைட்டு, குவார்ட்சு மற்றும் ஆர்சனோ பைரைட்டு முதலிய கனிமங்களுடன் பொதுவாகக் கலந்து காணப்படுகிறது. செக் குடியரசு, போலந்து மற்றும் செருமன் போன்ற நாடுகளில் சைகைட்டு கிடைக்கிறது[3] 1978 ஆம் ஆண்டு செக் குடியரசுவின் பொகிமியா மண்டலத்தைச் சார்ந்த குட்னா வோரா நகரத்தில் இருக்கும் சபாரி சுரங்கத்தில் முதன்முதலாக சைகைட்டு கண்டறியப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் பிறந்த செக் குடியரசின் புவிவேதியியல் வல்லுநர் வக்லாவ் சைகைட்டு என்பவரின் நினைவாக இக்கனிமத்திற்கு சைகைட்டு எனப் பெயரிடப்பட்டது[2][3]

மேற்கோள்கள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைகைட்டு&oldid=2760194" இலிருந்து மீள்விக்கப்பட்டது