சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் என்பவர் சிவகங்கை மாவட்டம் கட்டிகுளத்தில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் அங்கு வாழ்ந்த ராமலிங்க சாமிகளின் சீடராக இருந்தவர். ராமலிங்க சாமிகளிடம் இருந்த சூட்டுக்கோல், அவரது காலத்திற்கு பிறகு மாயாண்டி சாமிகளிடம் இருந்தது. தற்போது இந்த சூட்டுக்கோல் மாயாண்டி சாமிகள் சமாதியில் உள்ளது. அந்தக் கோலால் நல்லவர்களுக்கு நன்மையும், தீயவர்களுக்கு தண்டனையும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளார் - கூத்தாயி அம்மாள் தம்பதியினருக்கு காளயுத்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் மாயாண்டி பிறந்தார். இளவயதிலேயே இறையருள் பெற்றார்.

பள்ளிக் கல்வியைக் கற்றார். இடையே சித்து வேலைகளால் மக்களிடேயே பிரபலாக இருந்தார், பெற்றோர் இவரை புளியங்குடி கிராமத்தினைச் சேர்ந்த மீனாட்சி எனும் பெண்மணிக்கு திருமணம் செய்துவைத்தனர்,. ஒரு மகனையும், மகளையும் பெற்றார், பழநி யாத்திரைக்காக மனைவியின் நகையை விற்று அங்கு சென்றார். ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கும் உணவளித்தார்.

1930 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11ம் நாள் சமாதியடைந்தார்.

மதுரையைச் சேர்ந்த செல்வந்தரான கருப்பணக்கோனாரின் மகன் இருளப்பக்கோனார் என்பவர் திருப்பரங்குன்றம் அருகே மாயாண்டி சுவாமிகளுக்கு கோவில் கட்டினார்.இவரது சந்ததிகள் இன்றளவும் இந்த கோவிலை பாதுகாத்து வருகின்றனர்.


ஆதாரங்கள்[தொகு]

  1. "சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்!".