சுலப் பன்னாட்டுச் சமூக சேவை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலப் பன்னாட்டுச் சமூக சேவை நிறுவனம்
உருவாக்கம்1970
வகைஅரசு சாரா நிறுவனம்
சேவைப் பகுதி
இந்தியா
வலைத்தளம்sulabhinternational.org
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் சுலப் பன்னாட்மைப்பின் துப்புரவுத் தொழிலாளர்கள் குழு 2006 மே 16 அன்று புதுதில்லியில்

சுலப் பன்னாடு (Sulabh International) என்பது இந்தியாவைத் தளமாகக் கொண்ட சமூக சேவை அமைப்பாகும், இது மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள், கழிவு மேலாண்மை மற்றும் கல்வி மூலம் சமூக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு 50,000 தொண்டர்களைக் கொண்டுள்ளது.[1] சுலாப் பன்னாட்டு அமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.[2]இந்நிறுவனத்திற்கு 2016ம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

சுலப் பன்னாட்டமைப்பு பிந்தேசுவர் பதக்கு என்பவரால் 1970ல் பீகார் மாநிலத்தில் 50,000 தொண்டர்களுடன் நிறுவப்பட்டது. துடைத்தழித்தல் இல்லாத இரண்டு குழி கழிவறை (சுலாப் சவுசாலயா) இவர்களின் அரிய படைப்பாகும். பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மனித கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பம்; கட்டுமானம் & பராமரித்தல் என்ற புதிய கருத்து, பொது கழிப்பறைகளைப் பணம் செலுத்திப் பயன்படுத்துதல் என்ற திட்டத்துடன் சுலப் வளாகம் இவர்களது திட்டமாகும். குளியல், சலவை மற்றும் சிறுநீர் வசதியுடன் கூடிய இந்த வசதியினை தினமும் சுமார் பத்து மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். கழிவுகளிருந்து உயிரிவளி மற்றும் உயிர் உரம் உருவாக்கும் திட்டம், நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களுக்கான நடுத்தர திறன் கொண்ட குறைந்த பராமரிப்பு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இவர்களின் பங்களிப்பாகும். புது தில்லியில் ஆங்கில-நடுத்தர பொதுப் பள்ளி மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளுக்கு, குறிப்பாகத் துப்பரவு பணியாளர் குடும்பத்தினைச் சார்ந்தவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மையங்கள் உள்ளடக்கியது. இதனால் துப்பரவு பணியாளர்களின் குழந்தைகள் வேலைவாய்ப்பிற்காகப் போட்டியிட முடியும்.

நிறுவனம்[தொகு]

சென்னையில் சுலாப் சிறுநீர் வளாகம்
இந்தியாவில் உள்ள சுலாப் வளாகத்தில் காணப்படும் இரண்டு "சுற்றுச்சூழல்" கழிப்பறை

1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் துருக்கியின் இசுதான்புல்லில் நடைபெற்ற வாழிடம்- II மாநாட்டில் சுலப்பின் துப்புரவு முறையை உலகளாவிய "நகர்ப்புற சிறந்த பயிற்சி" என்று ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்ற மையம் பாராட்டியுள்ளது.  ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக சபை இதன் பணிகளை அங்கீகரிப்பதற்காக சுலாபிற்கு சிறப்பு ஆலோசனை தகுதியினை வழங்கியது.[3]

மனித கழிவுகளை அகற்றுவது மற்றும் சமூக சீர்திருத்தங்கள் குறித்த சுலாப் திட்டம் 35,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்கியதாகவும், 10,000,000 (1 கோடி) மனித நாட்களை உருவாக்கி, 240 நகரங்களை மனிதனே கழிவுகளை அகற்றும் நிலையினை மாற்றியது.[4]

சுலப் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளோடு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது. பிரித்தானியக் குழு, யுஎசுஏட், பிஓஅர்ர்டிஏ, ஜெர்மன் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், பெல்ஜியம், ஜிஈஆரீஎசு, பிரான்சு, சிஈஈஐசி, எச்ஆர்ஐஈஈ, சீனா மற்றும் இடச்சு நிறுவனமான கசுகோனிங் மற்றும் யூரோகன்சல்டண்ட் ஆகியன குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.

2006ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கையின் 124ஆம் பக்கத்தில் சுலாப் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஏழைகளுக்குச் சுகாதாரம் கொண்டு வந்ததற்காக சுலப் பாராட்டப்பட்டது.

அக்டோபர் 2007இல், சுலாப் மலிவு விலையிலான கழிப்பறையினை வடிவமைத்தது. இதன் மூலம் மனித கழிவுகளை உயிரிவளி மற்றும் உரமாக மறுசுழற்சி செய்யலாம்.

பதக்கின் பணிகள் மற்றும் பங்களிப்புகளுக்காக 2009 ஸ்டாக்ஹோம் நீர் பரிசை இந்நிறுவனம் பெற்றது.[5] சுலப் பன்னாட்டு நிறுவனம் 2016ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசை அட்சயப் பாத்திரம் அறக்கட்டளையுடன் இணைந்து 2019இல் பகிர்ந்துகொண்டது.[6]

சுலாப் சர்வதேச கழிப்பறைகள் அருங்காட்சியகம்[தொகு]

டெல்லியில் உள்ள சுலப் பன்னாட்டு நிறுவன வளாகத்தில், சுகாதாரம் மற்றும் கழிப்பறைகளின் வரலாற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட “சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம்” அமைக்கப்பட்டது.[7][8]

திறனாய்வு[தொகு]

முகுல் சர்மா (2017) போன்ற அறிஞர்களால் இந்த அமைப்பு விமர்சனத்திற்கு உள்ளது. சாதி மற்றும் இயற்கை: தலித்துகள் மற்றும் இந்தியச் சுற்றுச்சூழல் அரசியல் என்ற புத்தகத்தில் சுலப் பன்னாட்டமைப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. சர்மாவின் விமர்சனம் முக்கியமாக ஒரு பிராமண மற்றும் காந்திய ஆர்வலர் பிந்தேசுவர் பதக்கு எவ்வாறு மனித கழிவுகளை அகற்றுவது மற்றும் பொதுவாகத் துப்புரவுப் பணிகள் போன்ற சாதி அடிப்படையிலான தொழிலைக் கையாளும் போது ஆதரவளிக்கும் மற்றும் மகிமைப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்துகிறார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Sulabh International gets U.N. recognition". 2008-10-05 இம் மூலத்தில் இருந்து 2008-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081007080718/http://www.hindu.com/2008/10/05/stories/2008100555200700.htm. 
  2. The Big Necessity: The Unmentionable World of Human Waste and Why It Matters. September 2008.
  3. . Chennai, India. 
  4. "Sulabh International Social Service Organization" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Sulabh founder wins Swedish prize". http://timesofindia.indiatimes.com/India/Sulabh-founder-wins-Swedish-prize/articleshow/4314727.cms. 
  6. "President confers Gandhi Peace Prize" இம் மூலத்தில் இருந்து 2019-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191221184324/http://www.newsonair.com/News?title=President-confers-Gandhi-Peace-Prize&id=360273. 
  7. Lonely Planet India – 10th edition
  8. "Sulabh International Museum of Toilets". travelblog.org. June 26, 2009. பார்க்கப்பட்ட நாள் November 19, 2014.
  9. https://muse.jhu.edu/article/666057

வெளி இணைப்புகள்[தொகு]