சுரேந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திர ரெட்டி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1965–1971
முன்னையவர்எடிகலா மதுசூதன் ராவ்
தொகுதிமகபூபாபாத்து
பதவியில்
1967–1971
முன்னையவர்பக்கர் அலி மிர்சா
பின்னவர்எசு.பி. கிரி
தொகுதிவாரங்கல்
பதவியில்
1989–1996
முன்னையவர்டி. கல்பனா தேவி
பின்னவர்அசுமீரா சந்துலால்
தொகுதிவாரங்கல்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1978–1989
முன்னையவர்நுகலா இராமச்சந்திர ரெட்டி
பின்னவர்தரம்சோத் ரெடியா நாயக்கு
தொகுதிதோர்னக்கல்
ஐதராபாத்து குதிரைப் பந்தயக் கழகத் தலைவர்.[1]
பதவியில்
1976–1977
பதவியில்
1983–தற்பொழுது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராமசகாயம் சுரேந்தர் ரெட்டி

10 அக்டோபர் 1931 (1931-10-10) (அகவை 92)[1]
கம்மம், ஆந்திரப் பிரதேசம்
(தற்பொழுது தெலங்காணா, இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
செயமாலா ரெட்டி (தி. 1956)
பிள்ளைகள்3

சுரேந்திர ரெட்டி (Surendra Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு அக்டோடபர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மகபூபாபாத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

வாரங்கலில் இருந்து 4, 9 மற்றும் 10 ஆவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுரேந்திர ரெட்டி 1956 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதியன்று செயமாலா ரெட்டியை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். சுரேந்திர ரெட்டியின் பேரன் விநாயக் ரெட்டி, தக்குபதி வெங்கடேசின் மூத்த மகள் ஆசுரிதா தக்குபதியை மணந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து 1965 ஆம் ஆண்டில் மகபூபாபாத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். 1967 ஆம் ஆண்டில் வாரங்கல் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தோர்னக்கல்லில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியில் இருந்து 185 பேரில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் வாரங்கலில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Surender Reddy". Asian Racing Federation. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
  2. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  3. "Aashritha Daggubati and Vinayak Reddy tie the knot in a grand wedding in Jaipur – Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_ரெட்டி&oldid=3810299" இலிருந்து மீள்விக்கப்பட்டது