சுண்டிக்குளம் தேசிய வனம்

ஆள்கூறுகள்: 09°29′55″N 80°30′25″E / 9.49861°N 80.50694°E / 9.49861; 80.50694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்டிக்குளம் தேசிய வனம்
சுண்டிக்குளம் தேசிய பூங்கா
Map showing the location of சுண்டிக்குளம் தேசிய வனம்
Map showing the location of சுண்டிக்குளம் தேசிய வனம்
சுண்டிக்குளம் தேசிய வனம்
அமைவிடம்வட மாகாணம்
அருகாமை நகரம்கிளிநொச்சி
ஆள்கூறுகள்09°29′55″N 80°30′25″E / 9.49861°N 80.50694°E / 9.49861; 80.50694
பரப்பளவு196 km2 (76 sq mi)
நிறுவப்பட்டது25 பெப்ரவரி 1938 (1938-02-25) (சரணாலயம்)
22 சூன் 2015 (2015-06-22) (தேசிய வனம்)
நிருவாகிவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

சுண்டிக்குளம் தேசிய வனம் (Chundikkulam National Park) வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

சுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றிலும் காணப்ட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 25 பெப்ருவரி 1938 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1]

மே 2015 இல் அரசாங்கம் சுண்டிக்குளத்துடன், ஆதாம் பாலம், நெடுந்தீவு, மடு வீதி ஆகியவற்றை தேசிய வனங்களாக்கவிருப்பதாக அறிவித்தது.[2] சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய வனமாக 22 சூன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 ஏக்கர்கள்) பரப்புடன் அறிவிக்கப்பட்டது.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. Green, Michael J. B. (1990). IUCN Directory of South Asian Protected Areas. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பக். 201-202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-8317-0030-2. https://ia802604.us.archive.org/6/items/iucndirectoryofs90gree/iucndirectoryofs90gree.pdf. 
  2. Rodrigo, Malaka (10 May 2015). "Wild north gets Govt’s helping hand at last". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/150510/news/wild-north-gets-govts-helping-hand-at-last-148433.html. 
  3. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE FAUNA AND FLORA PROTECTION ORDINANCE (CHAPTER 469) Order under Subsection (4) of Section 2". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1920/03. 22 June 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_03/1920_03%20E.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "National Parks". Department of Wildlife Conservation. Archived from the original on 2016-01-20. பார்க்கப்பட்ட நாள் 2017-03-06.