சுஜாதா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா மேத்தா
Sujata Mehta
உறுப்பினர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 பிப்ரவரி 2017
செயலர் (மேற்உ), வெளியுறவுத் துறை அமைச்சகம்
பதவியில்
11 சனவரி 2016[1] – 21 பிப்ரவரி 2017
முன்னையவர்நவ்தேஜ் சர்னா[2]
பின்னவர்ருச்சி ஞானஷ்யம்[3]
இந்திய தூதர்-எசுப்பானியா[4]
பதவியில்
நவம்பர் 2007 – ஆகத்து 2011
முன்னையவர்சூரியகாந்தி திரிபாதி[4]
பின்னவர்சுனில் குமார் லால்[5]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மார்ச்சு 1957 (1957-03-30) (அகவை 67)[6]
புது தில்லி
வேலைஇராஜதந்திரி

சுஜாதா மேத்தா (Sujata Mehta) என்பவர் முன்னாள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியும், தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

சுஜாதா சிங் 30 மார்ச் 1957-ல் பிறந்தார்.[6] இவர் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் 1980-ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

பணி[தொகு]

1980 தொகுப்பு இந்திய வெளியுறவுப் பணிஅதிகாரி, மேத்தா ஆகத்து 1982 முதல் பிப்ரவரி 1984 வரை மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக பணியாற்றினார். இவர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பணியிலும், எசுப்பானியாவிற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் நியமிக்கப்பட்டார். சுஜாதா மேத்தா, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிராயுதபாணி மாநாட்டிற்கான இந்தியத் தூதராகவும் நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.[7] இவர் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.

சுஜாதா மேத்தா தனது பணி ஓய்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வெளியுறவுச் சேவையிலிருந்து விலகி[8] 21 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Air Marshal Ajit Shankarrao Bhonsle and Ms. Sujata Mehta take oath as Members, UPSC".
  2. "India's Ambassadors to Afghanistan, Vietnam appointed as secretaries in MEA - Latest News & Updates at Daily News & Analysis". 23 November 2015.
  3. "Ruchi Ghanashyam appointed Secretary (West) in MEA - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/economy/policy/ruchi-ghanashyam-appointed-secretary-west-in-mea/articleshow/57390136.cms. 
  4. 4.0 4.1 "Sorry for the inconvenience".
  5. "Sorry for the inconvenience".
  6. 6.0 6.1 "Archived copy" (PDF). mea.gov.in. Archived from the original (PDF) on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Why India abstained on Arms Trade Treaty". The Hindu. 3 April 2013. http://www.thehindu.com/opinion/op-ed/why-india-abstained-on-arms-trade-treaty/article4573882.ece. 
  8. "Former diplomat Sujata Mehta appointed UPSC member - Latest News & Updates at Daily News & Analysis". 23 February 2017.
  9. "UPSC : Air Marshal Ajit Shankarrao Bhonsle and Sujata Mehta Take Oath as Commission Members".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_மேத்தா&oldid=3674525" இலிருந்து மீள்விக்கப்பட்டது