சீமைக் கருவேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீமை கருவேலமரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீமைக் கருவேலம்
சீமைக் கருவேலமரக் கன்று
சீமைக் கருவேலமரக் கன்று
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
(தரப்படுத்தப்படாத) Eurosids I
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Mimosoideae
Tribe: Mimoseae
பேரினம்: Prosopis
இனம்: P. juliflora
இருசொற்பெயர்
Prosopis juliflora
(Sw.) DC.

சீமைக் கருவேலம் (Prosopis juliflora) அல்லது வேலிக்காத்தான் எனப்பரவலாக அறியப்பட்ட இது வேளாண் நிலங்களை மற்றும் வாழ்வாதரங்களை நாசப்படுத்தும் மிகக்கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora வாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca என அறியப்படுகிறது. மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாக கொண்ட இவை ஆசிய, ஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக்களையாக உருவெடுத்துள்ளது.

பொருளடக்கம்

நச்சுக்களை [தொகு]

பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டுவருகிறது.

சீமைக் கருவேல்

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனை களைய பல அரசு மற்றும் தன்னார்வள தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

வடிவமைப்பு [தொகு]

மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், பச்சை நிறக்காய்களையும் முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும். இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீலம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.

தன்மை [தொகு]

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

மாற்றுப் பெயர்கள் [தொகு]

தமிழ் நாட்டில் காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என அழைக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica) ஒத்து இருப்பதால் இவை கருவமரம் என அழைக்கப்படுதலும் உண்டு. ஆனால் அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.

பாதிப்புகள் [தொகு]

Stop hand.png இக்கட்டுரை அல்லது கட்டுரைப் பகுதி விக்கிபீடியாவின் நடுநிலைக்கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம்.
ஒரு விக்கிபீடியர் இக்கட்டுரையின் நடுவு நிலைமையை ஆராயக் கோரிப் பரிந்துரைத்திருக்கிறார். இப்பரிந்துரை குறித்த உரையாடலை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம்.

வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை. இவைகளால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது.

பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் நிறையபேர் உண்டு.[சான்று தேவை] தாவரம் முழுமையுமே நஞ்சாக உள்ளது.

தீமையின் பட்டியல்கள் [தொகு]

  • விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
  • அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது
  • நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
  • புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
  • நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு
  • இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன

இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

அழிக்கும்முறை [தொகு]

இயந்திரங்களைக் கொண்டும், மரங்களை வெட்டி வீழ்த்துவதின் மூலமும் அழிக்கலாம். மேலும், இதை வெட்டியபிறகு அவ்வேர்களை எரித்துவிடுவதே நிறந்தரத் தடுப்புக்கு வழி.

மாற்றுவழி [தொகு]

இதன் விறகுகள் அதிக ஆற்றல் கொண்டவை என அறியப்பட்டுள்ளது. இவைகள் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை வளர்க்க வேண்டிய இடம் பாலைவனம், விளைநிலமல்ல.

புகைப் படங்கள் [தொகு]

ஆதாரங்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீமைக்_கருவேலம்&oldid=1357797" இருந்து மீள்விக்கப்பட்டது