சீசெல்சு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 4°37′23″S 55°27′11″E / 4.623°S 55.453°E / -4.623; 55.453
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசெல்சு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Seychelles Natural History Museum
இயற்கை வரலாற்று அருங்காட்சியக கட்டடம்
Map
நிறுவப்பட்டது1964
அமைவிடம்விக்டோரியா, மாகி, சீசெல்சு
ஆள்கூற்று4°37′23″S 55°27′11″E / 4.623°S 55.453°E / -4.623; 55.453

சீசெல்சு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Seychelles Natural History Museum) சீசெல்சு நாட்டின் மாகி தீவுக்கு அடுத்துள்ள தலைநகரமான விக்டோரியாவின் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1][2][3] மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான சீசெல்சின் இவ்வரலாற்று அருங்காட்சியகம் 1965 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தலைநகர் விக்டோரியாவில் உள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் அடிமை காலம் முதல் நவீன காலம் வரை தீவு தேசத்தின் வரலாற்றை உள்ளடக்கிய பல காட்சியகங்கள் உள்ளன. அருங்காட்சியகத்தில் தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் மானுடவியல் பிரிவுகளும் உள்ளன. சீசெல்சு மக்கள் இராணுவம், சீசெல்சு மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் சீசெல்சு மக்கள் பாதுகாப்புப் படைகளின் வரலாறு தொடர்பான சில பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Museums in Seychelles". Africa.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  2. Ernesta, Sharon; Bonnelame, Betymie (15 April 2017). "Seychelles' history museum gets a facelift, to open end of 2017". Seychelles News Agency. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
  3. "Seychelles Natural History Museum". TripAdvisor. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.

மேலும் வாசிக்க[தொகு]