சிறுகோள் பட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறுகோள் பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறுகோள் பட்டை (Asteroid belt) என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள சூரிய மண்டலத்தின் பகுதியாகும். இப்பகுதியில் பல்லாயிரணக்கணக்கில் சிறுகோள்கள் உள்ளன. இப்பட்டை தவிர சூரிய மண்டலத்தின் வேறு சில பகுதிகளிலும் சிறுகோள்கள் உள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது முக்கிய சிறுகோள் பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.