சிறீ பிரவரசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ பிரவரசேனன்
அல்கான் ஹூன அரசன்
சிறீநகரின் நிறுவனர் என்று கூறப்படும் பிரவரசேனனின் நாணயம். முதுகுப்புறம்: கீழே அமர்ந்திருக்கும் இரண்டு உருவங்களுடன் நிற்கும் அரசன், பெயர் "பிரவரசேனர்". தலைகீழ்: சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேவி. புராணக்கதை "கிடாரன்". ஏறத்தாழ பொ.ச.6- 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.[1]
சிறீ பிரவரசேனன் is located in South Asia
சிறீ பிரவரசேனன்
பிரவரசேனனின் பிரதேசத்தின் தோராயமான இடம்
ஆட்சி530-590
முன்னிருந்தவர்மிகிரகுலன்
பின்வந்தவர்கோகர்ணன்

சிறீபிரவரசேனன் (Sri Pravarasena) (ஆட்சிக் காலம் பொ.ச.530-590), காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் இராஜதரங்கிணியின் ஆட்சிப் பட்டியல்களின் அடிப்படையில் இரண்டாம் பிரவரசேனன் எனவும் அறியப்படும் இவர்,[2] வடமேற்கு இந்தியாவின் காந்தாரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 6-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அல்கான் ஹூன வம்சத்தின் ஹூன அரசன் ஆவார். இவரது ஆட்சியானது பொ.ச.530-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 60 ஆண்டுகள் நீடித்தது.[3][4]

கல்கணரின் 12-ஆம் நூற்றாண்டின் உரையான இராஜதரங்கிணியின் படி, இரண்டாம் பிரவரசேனன் என்ற அரசன் பிரவரபுரம் (பிரவரசேன-புரம் என்றும் அழைக்கப்படுகிறது) என்ற புதிய தலைநகரை நிறுவினான். நிலப்பரப்பு விவரங்களின் அடிப்படையில், பிரவரபுரம் நவீன நகரமான சிறீநகரைப் போலவே தோன்றுகிறது. பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆரல் இசுடெயின் இந்த அரசரை 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார்.[3][5] "பிரவரேசம்" என்ற பெயரில் ஒரு கோவிலையும் கட்டினார்.[3][4]

காஷ்மீர், காந்தாரதேசம் போன்ற பகுதியில் ஆண்டு வந்த அல்கான் ஹூன ஆட்சியாளரான மிகிரகுலனுக்குப் பிறகு பிரவரசேனன் ஆட்சிக்கு வந்ததாகக் கருதப்படுகிறார், மேலும் இவர் தோரமணனின் மகனாக இருக்கலாம்.[3]

பிரவரசேனனுக்குப் பின் சிவ பக்தரான கோகர்ணன் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். பின்னர் அவனது மகனான நரேந்திராதித்ய கிங்கிலன் ஆட்சிக்கு வந்தான்.[3][4] நரேந்திராதித்யாவின் மகன் யுதிஷ்டிரன், அல்கன் ஹூனர்களில் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளராவான்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Cribb, Joe. "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly" (in en). Numismatic Digest volume 40 (2016). https://www.academia.edu/32663187/Early_Medieval_Kashmir_Coinage_A_New_Hoard_and_An_Anomaly. 
  2. Friedberg, Arthur L.; Friedberg, Ira S. (2009). Gold Coins of the World: From Ancient Times to the Present : an Illustrated Standard Catalogue with Valuations (in ஆங்கிலம்). Coin & Currency Institute. p. 463. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780871843081.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Dani, Ahmad Hasan; Litvinsky, B. A. (1996). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 (in ஆங்கிலம்). UNESCO. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231032110.
  4. 4.0 4.1 4.2 Kim, Hyun Jin (2015). The Huns (in ஆங்கிலம்). Routledge. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317340911.
  5. M. A. Stein (1989). Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir. Motilal Banarsidass. pp. 439–441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0370-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பிரவரசேனன்&oldid=3924985" இலிருந்து மீள்விக்கப்பட்டது