சிட்னி ஷெல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்னி ஷெல்டன்
Sidney Sheldon
Sidney sheldon.jpg
பிறப்பு பெப்ரவரி 11, 1917(1917-02-11)
சிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜனவரி 30 2007 (அகவை 89)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில் புதின ஆசிரியர்
தேசியம் அமெரிக்கர்
எழுதிய காலம் 1989 - 2005
பாணி குற்றவியல் புதினம்,
கிளர்ச்சியூட்டும் புதினம்
முதல் படைப்பு(கள்) த நேக்கட் ஃபேஸ், 1970
இணையத்தளம் சிட்னி ஷெல்டனின் இணையத்தளம்

சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon, பெப்ரவரி 11, 1917ஜனவரி 30, 2007) ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது.

இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றவை: மாஸ்டர் ஒப் த கேம், ரேஜ் ஒப் ஏஞ்சல்ஸ், தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட் ஆகியவையாகும்.

இவர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் யூத இனத்தையும் சேர்ந்தவர்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம்.

The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 இல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.

இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

2005 இல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.

சிட்னி ஷெல்டன் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இவர் எழுதியுள்ள நாவல்கள்[தொகு]

  • The Naked Face (1970)
  • The Other Side of Midnight (1973)
  • A Stranger in the Mirror (1976)
  • Bloodline (1977)
  • Rage of Angels (1980)
  • Master of the Game (1982)
  • If Tomorrow Comes (1985)
  • Windmills of the Gods (1987)
  • The Sands of Time (1988)
  • Memories of Midnight (1990)
  • The Doomsday Conspiracy (1991)
  • The Stars Shine Down (1992)
  • Nothing Lasts Forever (1994)
  • Morning, Noon and Night (1995)
  • The Best Laid Plans (1997)
  • Tell Me Your Dreams (1998)
  • The Sky is Falling (2001)
  • Are You Afraid of the Dark? (2004)
  • Catoplus Terror

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_ஷெல்டன்&oldid=1477719" இருந்து மீள்விக்கப்பட்டது