சிங்களாந்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிங்களாந்தபுரம்
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
வாரச்சந்தை-பின்புறத்தில் மாரியம்மன் கோவில்

சிங்களாந்தபுரம் (ஆங்கிலம்: Singalandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.

பொருளடக்கம்

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,422 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 5345 ஆண்கள், 5077 பெண்கள் ஆவார்கள். இதில் மக்களின் சராசரி கல்வியறிவு 61.53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்களாந்தபுரம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] வரலாறு

சிங்கள்ளன் என்ற பெயருடைய அரசர் இவ்வூரை ஆட்சி செய்ததால் இவ்வூருக்கு சிங்களாந்தபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது [ஆதாரம் தேவை]. சிங்களாந்தபுரம் நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது[ஆதாரம் தேவை].

[தொகு] புவியியல்

சிங்களாந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 39.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 16.8˚ செல்சியஸ்.இவ்வூரின் அமைவிடம் 11°25'3"N 78°13'18"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (805அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] பருவமழை

தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சிங்களாந்தபுரத்தில் வருடத்திற்கு சுமார் 1800 மி.மீ மழை பெய்கிறது[சான்று தேவை].சிங்களாந்தபுரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. ஏற்காடு சிங்களாந்தபுரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொல்லிமலை சிங்களாந்தபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

[தொகு] கலாசாரம்

சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன[ஆதாரம் தேவை].

[தொகு] போக்குவரத்து

சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது

[தொகு] தொலைபேசி நிறுவனங்கள்

இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைப் போல சிங்களாந்தபுரத்திலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.

[தொகு] பள்ளி௧ள்

  • அரசினர் மேல்நிலை பள்ளி, சிங்களாந்தபுரம்
  • ஊராட்சி தொடக்௧ பள்ளி, சிங்களாந்தபுரம்
  • நேசனல் மெட்ரிகுலேசன் பள்ளி, சிங்களாந்தபுரம்

[தொகு] அலுவலகங்கள்

  • ஊராட்சி அலுவலகம்
  • தமிழ்நாடு மின்வாரியதுறை, உதவிபொறியாளர், அலுவலகம்
  • அஞ்சல் அலுவலகம்

[தொகு] கோவில்கள்

திருவேசுவரர் ஆலயம்
திருவேசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தியின் முன் உள்ள வல்வில் ஓரி சிலை
  • மாரியம்மன் கோவில்
  • அம்மன் கோவில்
  • காளி அம்மன் கோவில்
  • திருவேசுவரர் கோவில்
  • கற்புரநாரயணன் கோவில்
  • அண்ணமார் கோவில்
  • வேட்டைகாரசாமி கோவில்
  • பெரியசாமி கோவில்
  • பச்சையம்மன் கோவில்
  • கருப்பண்ணசாமி கோவில்
  • எட்டுக்கை அம்மன் கோவில்
  • பிள்ளையார் கோவில்
  • செளடேசுவரி அம்மன் கோவில்

[தொகு] வங்கிகள்

  • கார்பரேசன் வங்கி (தொலைபேசி: 04287-253426, 222857)
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - - Namakkal District;Rasipuram Taluk;Singalandapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=சிங்களாந்தபுரம்&oldid=931851" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி