சாரல் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரல் விருது என்பது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருதுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையாகவும், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனும் இலக்கிய வகைகளைத் தாங்கி நிற்கும் தமிழன்னையை உருவகப்படுத்தும் இலக்கியா எனும் அழகிய வெண்கலச் சிற்பமும் பரிசாக வழங்கப்படும். இந்த அறக்கட்டளை சார்பில் திரைப்பட இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 திலீப்குமார் 2009
2 கவிஞர் ஞானக்கூத்தன் 2010
3 அசோகமித்திரன் 2011
4 வண்ணநிலவன், வண்ணதாசன் 2012
5 பிரபஞ்சன் 2013
6 விக்ரமாதித்யன் 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரல்_விருது&oldid=3341888" இலிருந்து மீள்விக்கப்பட்டது