சாய் பிரதாப் அன்னய்யகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் பிரதாப் அன்னய்யகாரி
Sai Prathap Annayyagari
ஏ. சாய் பிரதாப் 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று புது தில்லியில் எஃகுத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்ற போது.
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்குனிபதி ராமையா
பின்னவர்மிதுன் ரெட்டி
தொகுதிஇராசம்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 செப்டம்பர் 1944 (1944-09-20) (அகவை 79)
கோலார், கருநாடகம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஏ. கிருட்டிணவேணி சாய் பிரதாபு
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்கடப்பா
As of 12 மே 2006

சாய் பிரதாப் அன்னய்யகாரி (Sai Prathap Annayyagari) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலும் இராசம்பேட்டை மக்களவையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது கடைசி ஆட்சிக் காலத்தில், இரண்டாவது மன்மோகன் சிங் அமைச்சரவையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எஃகுத் துறை அமைச்சராகவும், ஆறு மாதங்கள் கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [1]

தெலுங்கானா இயக்கத்தை இவர் எதிர்த்தார், மேலும் புதிய மாநிலத்தை உருவாக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்த காரணத்தால் அக்டோபர் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். எனினும் பிறர் வற்புறுத்தலின் பேரில் பதவி விலகல் நிராகரிக்கப்பட்டது. [2]

2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் சேரும் வரை, இவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார் [3] இருப்பினும், கட்சியை விட்டு விலகி 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் காங்கிரசு கட்சியில் மீண்டும் சேர்ந்தார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile: Annayyagari, Shri Sai Prathap". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  2. Kalavalapalli, Yogendra (2013-10-18). "Lok Sabha speaker Meira Kumar rejects resignations of 13 Andhra MPs" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  3. Rajeev, M. (2016-03-25). "Sai Pratap joins TDP". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/sai-pratap-joins-tdp/article8394840.ece. 
  4. "Unable to 'fit' in any other party, former Union minister Pratap to return to Congress". 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.