சாங்கு ஏரி
| சாங்கு ஏரி | |
|---|---|
| அமைவிடம் | கிழக்கு சிக்கிம் |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| சராசரி ஆழம் | 15 மீ (50 அடி) |
| மேற்பரப்பின் உயரம் | 3,780 மீ (12,400 அடி) |
| உறைதல் | குளிர் காலம் |
சாங்கு ஏரி அல்லது சோங்கோ ஏரி என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓர் ஏரி. இந்த ஏரி சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 3,780 மீட்டர் (12, 400 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் உள்ள நாதூ லா கணவாய்க்கு செல்லும் சாலை இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் செல்கிறது. இந்த ஏரியின் நினைவாக 2006 நவம்பர் ஆறாம் தேதி இந்திய அஞ்சல் துறை தபால்தலை ஒன்றும் வெளியிட்டுள்ளது.
இது கிழக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு யாக் எனப்படும் கவரிமா சவாரி உண்டு. உணவு, குளிருக்கான ஆடைகள் வாடகைக்குத் தரும் சில கடைகளும் உள்ளன.
புவியின் வடக்கு அரைக்கோளத்தில் இருந்து தெற்கே வலசை செல்லும் பறவைகளுக்கான முக்கியமான தங்குமிடமாகவும் இந்த ஏரி குறிப்பிடப்படுகிறது.