சாங்காய் உலக நிதி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாங்காய் உலக நிதி மையம்
上海环球金融中心

2010ல் சாங்காய் உலக நிதி மையம்.
பொதுவான தகவல்கள்
வகை அலுவலகம், விடுதி, அருங்காட்சியகம், பார்வை மேடை, வண்டிகள் தரிப்பிடம், சில்லறை வணிகம்
அமைவிடம் 100 செஞ்சுரி அவெனியூ, புடோங், சாங்காய், சீனா
கட்டுமானம்
தொடக்கம் 1997
நிறைவு 2008
தள எண்ணிக்கை 101
தளப்பரப்பு 381,600 m2 (4,107,500 sq ft)
முதன்மை ஒப்பந்தகாரர் சீன அரசக் கட்டுமானப் பொறியியல் நிறுவனம், சாங்காய் கான்சுட்ரக்சன் (குழுமம்) செனரல் கம்பனி ஆகியன.
செலவு RMB ¥ 8.17 billion
(USD $ 1.20 billion)
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் கோன் பெடெர்சன் ஃபாக்சு
அமைப்புப் பொறியாளர் லெசுலி ஈ. ராபர்ட்சன் அசோசியேட்சு RLLP
References

சாங்காய் உலக நிதி மையம் சீனாவின் சாங்காய் நகரின் புடோங் பகுதியில் அமைந்துள்ள அதியுயர் வானளாவி ஆகும். கோன் பெடெர்சன் ஃபாக்சு (Kohn Pedersen Fox) என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இவ்வானளாவி ஒரு கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம். இதில், அலுவலகங்கள், விடுதிகள், மாநாட்டு மண்டபங்கள், பார்வையாளர் மேடை போன்றனவும், நிலத்தளத்தில் ஒரு அங்காடியும் உள்ளன. பாக் அயத் சாங்காய் என்னும் விடுதி நிறுவனம் இக்கட்டிடத்தில் 174 அறைகளைக் கொண்ட ஒரு விடுதியை நடத்தி வருகிறது. இவ்விடுதி வானளாவியின் 79 ஆவது தளம் முதல் 93 ஆவது தளம் வரையுள்ள தளங்களில் அமைந்துள்ளது. இதனால், கட்டிடங்களில், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த விடுதிகளில் இரண்டாவது நிலையில் இது உள்ளது.


2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் தேதி இவ்வானளாவி அதன் முழு உயரமான 492 மீட்டர்களை (1,614.2 அடிகள்) எட்டியபோது அப்போதைய நிலையில் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெயரையும் சீனாவின் மிக உயரமான கட்டிடம் என்னும் பெயரையும் அது பெற்றது.

குறிப்புகள்[தொகு]

  1. "China's tallest and timely arrival". பிபிசி (28 Aug 2008).
  2. "சாங்காய் உலக நிதி மையம் - SkyscraperPage.com". பார்த்த நாள் 2008-04-10.
  3. "Shanghai tops out world's third-tallest building". பார்த்த நாள் 2008-04-10.
  4. "Shanghai World Financial Center - www.emporis.com". பார்த்த நாள் 2008-04-10.