சல்மா ஹாயெக்
| சல்மா ஹாயெக் | |
|---|---|
2012 |
|
| இயற் பெயர் | Salma Valgarma Hayek Jiménez |
| பிறப்பு | செப்டம்பர் 2, 1966 Coatzacoalcos, Veracruz, Mexico |
| தொழில் | நடிகை/தொலைக்காட்சி இயக்குநர் |
| நடிப்புக் காலம் | 1988–present |
| துணைவர் | François-Henri Pinault (2007-2008, 2009 - present) |
சல்மா வல்கர்மா ஹாயெக் ஜிமெனெஸ் (செப்டம்பர் 2, 1966 அன்று பிறந்தார்) மெக்சிகன் மற்றும் அமெரிக்க நடிகையும் இயக்குநரும் ஆவார். அவர் தொலைகாட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிப்பது உள்ளிட்டவை சல்மாவின் நற்பணிகள் ஆகும்.[1]
சல்மா சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு மெக்சிகன் தேசத்தில் இருந்து முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார். மெளனத்திரைப்பட நடிகை டொலோரெஸ் டெல் ரியோவின் காலத்திலிருந்து சல்மா ஹாலிவுட்டின் மிகவும் முக்கியமான மெக்சிகன் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க நடிகைகள் மூவரில் பெர்னாண்டா மாண்டெனெக்ரோவுக்கு பிறகு சல்மாவும் பரிந்துரைக்கப்பெற்றார் (முதன் முதலில் கேடலினா சேண்டினோ மொரெனொ அப்பரிந்துரையைப் பெற்றார்).
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஹாலிவுட் செய்தியாளர் தயாரித்த ஹாலிவுட் லாடினோ சமூகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்பினர்கள் பட்டியலான இனாகுரல் லாடினோ பவர் 50 இல் சல்மா நான்காமிடம் பெற்றிருந்தார்.[2] அதே மாதத்தில் ஒரு கணக்கெடுப்பில், 3,000 பிரபலங்களில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) சல்மா "மிகவும் கவர்ச்சிகரமான பிரபலமாக" தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்தக் கணக்கெடுப்பில் "65 சதவீத அமெரிக்க ஒன்றிய மக்கள் இவரை விவரிக்க 'செக்ஸி' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்".[3] 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எண்டர்டெயின்மெண்ட் வார இதழ் தனது "தொலைக்காட்சியில் மிகவும் மிடுக்கான 25 பேர்" என்ற பட்டியலில் சல்மாவிற்கு 17 ஆம் இடம் வழங்கியிருந்தது.[4]
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
சல்மா மெக்சிகோவில் உள்ள வெராக்ரூஸில் கோட்சகோல்கோசில், ஓபரா பாடகியும் சிறந்த டேலண்ட் ஸ்கௌட்டுமான (talent scout) டயானா ஜிமினெசுக்கும் எண்ணெய் நிறுவன நிர்வாகியான சாமி ஹாயெக்கிற்கும் மகளாகப் பிறந்தார்.[5][6][7] சல்மாவின் தந்தை மெக்சிகன் லெபனீஸ் பாரம்பரியத்தையும் இவரது தாயார் மெக்சிகன் ஸ்பானிஷ் பாரம்பரியத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.[8] இவரது முதல் பெயரான சல்மா என்பதற்கு அரபியில் "பாதுகாப்பு" என்று பொருள். பொருளாதாரத்தில் வளம்மிகுந்த கடவுள் பற்றுள்ள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த அவர் தனது 12வது வயதில் லூசியானாவின் கிரேண்ட் கோட்டேவில் உள்ள அகாடெமி ஆப் தி சாக்ரெட் ஹார்ட்டுக்கு அனுப்பப்பட்டார்.[7] ஆனால் சல்மா கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்.[9] சல்மா ஒலிம்பிக்கில் பங்கு பெறும் எண்ணத்துடன் உடற்பயிற்சி வல்லுநராக வேண்டிமென விரும்பினார். ஆனால் அவரது தந்தை மெக்சிகன் தேசிய அணியில் சல்மா தேர்ந்தெடுக்கபடுவதற்கு தடையாய் இருந்தார்.[10] அகாடெமியை நடத்தி வந்த அருட்சகோதரிகள் சல்மாவின் நடத்தை குறித்த அதிருப்தியால் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். அதனால் சல்மா மெக்சிகோவிற்கு திரும்பினார். பின்னர் அவர் டெக்சாஸில் ஹவுஸ்டனில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சல்மா தனது 17 ஆம் வயது வரை அங்கு வளர்ந்தார். மெக்சிகோ நகரத்தில் ஈப்ரூ அமெரிக்கன் பல்கலைக்கழக கல்லூரியில் சர்வதேசத் தொடர்புகள் துறையில் பட்டப்படிப்பு பயின்றார். ஆனால் அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, நடிகையாவதே தனது எதிர்காலம் என படிப்பை பாதியில் நிறுத்தினார்.[7]
தொழில் [தொகு]
மெக்சிகோ [தொகு]
சல்மா தனது 23 ஆம் வயதில் வெற்றிகரமான மெக்சிகன் டெலினோவில்லாவான தெரசாவில் (1989) தலைமைப் பாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் சல்மா மெக்சிகோவில் ஒரு பிரபல நடிகையானார். 1994 ஆல் ஆண்டில் சல்மா எல் கால்லிஜன் டி லாஸ் மிலக்ரோஸ் (மிராக்கில் அல்லே ) என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் மெக்சிகோ திரைப்பட வரலாற்றில் மற்ற திரைப்படங்களை விட அதிகமான விருதுகளை வென்றது. அதில் சல்மாவின் சிறந்த நடிப்பிற்காக ஏரியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[11]
ஆரம்ப கால ஹாலிவுட் நடிப்புப் பணி [தொகு]
1991 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்று ஸ்டெல்லா ஆட்லரிடம் சல்மா நடிப்பு பயின்றார்.[12] அவருக்கு கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஆங்கிலத்தில் சுமாராகவே பேச முடிந்தது.[13] 1995 ஆம் ஆண்டில் ராபர்ட் ரோட்ரிகஸும் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எலிசபெத் அவெலனும் டெஸ்பெரேடோ திரைப்படத்தில் ஆண்டனியோ பெண்டெராஸுடன் இணைந்து நடிக்கும் முக்கியக் கதாப்பாத்திரத்தை சல்மாவிற்கு வழங்கி அவர் எதிர்பார்த்த திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தனர்.[7] இத்திரைப்படம் ஹாலிவுட்டில் கவனத்தைப் பெற்றதுடன் ரோட்ரிகஸூம் சல்மாவும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தனர். இயக்குநர் மீது சல்மா கொண்ட உண்மையான பற்றின் காரணமாக, அவர் கைவிட்ட தி மாஸ்க் ஆப் ஜோரோவிலிருந்து விலகினார். பின்னர் அந்தப் பாத்திரத்தில் கேதரின் ஜீடா-ஜோன்ஸ் நடித்தார். ஸ்பை கிட்ஸ் திரைப்படத்தொடர் மூன்றிலும் சல்மா நடித்தார்.
ஃபூல்ஸ் ரஷ் இன் என்ற காதல் காமெடித் திரைப்படத்தில் மாத்தீவ் பெர்ரியுடன் சல்மா நடித்தார். டெஸ்பெரேடோ திரைப்படத்தைத் தொடர்ந்து ஃப்ரம் டஸ்க் டில் டானில் அவர் நடித்த காட்டேரி ராணி (vampire queen) பாத்திரம் சிறப்பாக இருந்தது. இத்திரைப்படத்தில் அவர் மேஜையின் மேல் பாம்புடன் நடனமாடி இருந்தார். 1999 ஆம் ஆண்டில் வில் ஸ்மித் நடித்து அதிக பணச்செலவில் எடுக்கப்பட்ட ஒயில்ட் ஒயில்ட் வெஸ்ட் (Wild Wild West) திரைப்படத்தில் சல்மாவும் நடித்தார். கெவின் ஸ்மித்த்தின் டோக்மா என்ற திரைப்படத்திலும் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[7] 2000 ஆம் ஆண்டில் டிராஃபிக் திரைப்படத்தில் பெனிசியோ டெல் டோரோவுடன் முக்கியத்துவமற்ற பாத்திரத்தில் சல்மா நடித்தார். 2003 ஆம் ஆண்டில் மரியாச்சி முத்திரைப்படங்களின் கடைசி பகுதியான ஒன்ஸ் அப்-ஆன் எ டைம் இன் மெக்சிகோவில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் டெஸ்பெரேடோ திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த அதே பாத்திரமாகும்.
பிந்தைய ஹாலிவுட் பணிகள்: இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகையாக [தொகு]
2000 ஆம் ஆண்டு வாக்கில் வெண்டனரோசா என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சல்மா தொடங்கினார். அந்நிறுவனம் மூலமாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் தயாரித்தார். அவரது முதல் தயாரிப்பில் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த எல் கொரொனெல் நோ டெயினே குவின் லே எஸ்கிரிபா (El Coronel No Tiene Quien Le Escriba) என்ற திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் மெக்சிகோவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது.[14]
2002 ஆம் ஆண்டு சல்மா இணைந்து தயாரித்த ஃப்ரிடா வெளியானது. இத்திரைப்படத்தில் ஃப்ரிடா கஹ்லோவாக சல்மாவும், அவரது மோசமான நடத்தையுள்ள கணவராக டையகோ ரிவேராவாக ஆல்ஃபிரட் மொலினாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஜூலி டேமர் இயக்கினார். இத்திரைப்படத்தில் சிறுபாத்திரங்களிலும், துணைப்பாத்திரங்களிலும் (வலெரியா கொலினோ, ஆஷ்லே ஜட், எட்வர்ட் நார்டன், ஜியோஃப்ரே ரஷ் போன்ற) புகழ்பெற்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இதில் முக்கிய பாத்திரத்தில் ஆண்டனியோ பெண்டெராஸ் நடித்தார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு சல்மா பரிந்துரைக்கப்பட்டார்.[7] இதன் மூலம் கேதி ஜுராடு மற்றும் அட்ரியானா பர்ராசா போன்று அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மெக்சிகன் நடிகைகளில் இவரும் ஒருவரானார். இத்திரைப்படம் இரண்டு ஆஸ்கார்களை வென்றது.
மிராபெல் சகோதரிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஜூலியா அல்வாரெஸ் எழுதிய நாவலைத் தழுவி அந்த நாவலின் பெயரிலேயே "இன் தி டைம் ஆப் பட்டர்பிளைஸ் " என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது.
இத்திரைப்படத்தில் சல்மா ஹாயெக், மிராபெல் சகோதரிகளில் ஒருவரான மினர்வா என்ற பாத்திரத்திலும், அச்சகோதரிகளை எதிர்க்கும் அதிகாரம் நிறைந்த சர்வாதிகாரியாக ரபேல் லியோனிடாஸ் என்ற பாத்திரத்தில் எட்வார்ட் ஜேம்ஸ் ஓல்மோஸும் நடித்திருந்தனர். மினர்வாவின் முதல் காதலராகவும் அவரது புரட்சிகர நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிப்பவராகவும் மார்க் ஆண்டனி நடித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டில் சல்மா தயாரித்து இயக்கிய டி மால்டொனாடொ மிராக்கிள் , ஷோ டைம் திரைப்படமானது குழந்தைகள்/இளைஞர்கள்/குடும்பம் சிறப்புப் பிரிவில் சிறந்த இயக்கத்துக்கான டே டைம் எம்மி விருதைப் பெற்றது.[15] 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரின்சுக்காக "டெ அமோ கொராசன்" ("ஐ லவ் யூ, ஸ்வீட்ஹார்ட்") என்ற இசை வீடியோவை சல்மா இயக்கினார். இந்த வீடியோவில் அவரது நெருங்கிய தோழியான மியா மேஸ்ட்ரொ இடம்பெற்றார்.[16]
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டுவரும் அக்லி பெட்டி என்ற தொலைக்காட்சித் தொடருக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகவும் சல்மா இருக்கிறார். 2001 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான கொலம்பிய டெலினொவெல்லா யோ சோய் பெட்டி லா பியாவின் உரிமத்தையும் திரைக்கதையையும் வாங்கிய பென் சில்வர்மேனுடன் இணைந்து அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களில் சல்மா பணிபுரிந்தார். முதலில் 2004 ஆம் ஆண்டில் NBCக்காக சிட்காம் எனப்படும் அரைமணி நேர நகைச்சுவை நிகழ்ச்சியாக உருவாக்கப்பட்ட இச்செயல்திட்டம், பின்னர் 2006-2007 கால கட்டங்களில் ABCயால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சில்வியோ ஹோர்டாவும் தயாரிப்பில் பங்களித்தார். சல்மா அக்லி பெட்டியில் சோபியா ரேயிஸ் என்ற பத்திரிக்கை ஆசிரியராக சிறப்புப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் அதில் முக்கிய பாத்திரத்திலும் நடிக்கிறார். இந்நிகழ்ச்சி விரைவிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், 2007 ஆம் ஆண்டில் சிறந்த காமெடித் தொடருக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றது. சோபியா என்ற பாத்திரத்தில் நடித்த சல்மா 59 ஆவது பிரைம்டைம் எம்மி விருதுகளில் காமெடித் தொடரில் சிறந்த சிறப்புத் தோற்ற நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[17]
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சல்மா, MGM உடனான உடன்படிக்கையை இறுதி செய்து தனது இலத்தீன் சார்ந்த சொந்த திரைப்பட நிறுவனமான வெண்டன்ரோசாவின் CEO ஆனார்.[18] அதற்கடுத்த மாதத்தில் அவர் ABCயுடன் வெண்டன்ரோசா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர்களுடைய நெட்வொர்க்கில் நிகழ்ச்சிகளை தயாரித்து தருவதற்கான இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[19]
இஸ்ஸா லோபஸால் எழுதப்பட்ட லா பண்டா என்ற மெக்சிகோவில் நிகழும் ஸ்பானிய மொழி காதல் காமெடித் திரைப்படத்தை சல்மா தயாரிக்கிறார்.
சமீபத்தில் 30 ராக்கில் ஜேக் டொனகியின் அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் எலிசா என்ற நர்ஸ் பாத்திரத்தில் சல்மா நடித்தார். அதில் அவரைக் காதலிக்கும் பாத்திரமாக ஜாக் நடித்தார்.
க்ரோன் அப்ஸ் திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லரின் மனைவியாக சல்மா நடித்து வருகிறார். இதில் கிரிஸ் ராக், கெவின் ஜேம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.[20]
பாடகியாக [தொகு]
சல்மா மூன்று திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். முதன் முதலில் டெஸ்பெரேடோவில் க்விடேட் அக்வி என்ற பாடலைப் பாடினார். ஃப்ரீடாவில் இவர் லாஸ் வேகா குழுவுடன் இணைந்து லா ப்ருஜா எனப்படும் மெக்சிகன் நாட்டுப்புறப்பாடலைப் பாடியுள்ளார். மேலும் ஒன்ஸ் அப்-ஆன் எ டைம் இன் மெக்சிகோவின் இறுதியில் வரும் சியண்ட் மி அமர் என்ற பாடலையும் பாடியுள்ளார். அவர் "அக்ராஸ் தி யுனிவர்ஸில்" ஹேப்பினெஸ் இன் அ வார்ம் கன் என்னும் பாடலில் சிங்கிங் நர்ஸாகவும் பங்களித்துள்ளார்.
விளம்பரப் பணி [தொகு]
பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவான் காஸ்மெடிக்ஸின் பிரதிநிதியாக சல்மா உள்ளார்.[21] அவர் இதற்கு முன்னர் 1998 ஆம் ஆண்டில் ரெவ்லானின் பிரதிநிதியாக இருந்தார். 2001 ஆம் ஆண்டில் சோபார்டுக்கு[22] மாடலாக இருந்தார். மேலும் 2006 ஆம் ஆண்டில் கம்பரி விளம்பரங்களுக்காக நடித்தார். அவை மரியோ டெஸ்டினோவால் படம்பிடிக்கப்பட்டன.[23] ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி சக மெக்சிகன் நடிகை மரியா பெலிக்ஸினால் கவரப்பட்டு கார்டைரின் லா டொனா கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த உதவினார்.[24]
மேலும் லிங்கன் கார்சுக்காக ஸ்பானிய மொழி விளம்பரத் தொடர்களில் சல்மா நடித்தார். இதனால் லிங்கன் நேவிகேட்டரின் விற்பனை ஹைஸ்பேனிக்ஸ் மக்களிடையே 12 சதவீதம் உயர்ந்தது.
கலை [தொகு]
2006 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஓவியர் ஜியார்ஜ் யெப்ஸ்ஸும் திரைப்படத் தயாரிப்பாளர் ரோட்ரிகஸும் இணைந்து டெக்சாஸில் உள்ள சேன் ஆண்டனியோவை சேர்ந்த தி ப்ளூ ஸ்டார் காண்டெம்பரரி ஆர்ட் சென்டரில் சல்மாவை ஆஜ்டெக் பெண்தெய்வமான இட்ஸ்பப்பலாட் வடிவத்தில் 16 உருவ ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தனர்.[25]
தனிப்பட்ட வாழ்க்கை [தொகு]
ஹாயேக் அமெரிக்க ஒன்றியக் குடிமகள் ஆவார்.[26] 1990 முதல் 2003 ஆம் ஆண்டு வரை நடிகர் எட்வர்ட் நார்ட்டனுடனும், பின்னர் 2003 ஆம் ஆண்டில் ஜோஷ் லூகாசுடனும் சல்மா டேட்டிங் செய்திருந்தார். ஸ்பானிய நடிகை பெனெலோப் க்ரூஸ் அவரது நெருங்கியத் தோழி ஆவார். 2006 ஆம் ஆண்டில் அவரது பண்டிடாஸ் என்ற திரைப்படத்தில் சல்மா தனது தோழியுடன் நடித்தார். ராம்தாவின் ஞான உபதேசப் பள்ளியில் சல்மா கல்வி பயின்றார்.[27] சல்மாவின் சகோதரர் சாமி ஹாயெக் [28] ஒரு வடிவமைப்பாளர் ஆவார். அவர் டார்கெட்[29] நிறுவனத்திற்காக வடிவமைப்பாளராக இருந்தார். மேலும் லூயிஸ் உய்ட்டன், பிராட் பிட் மற்றும் மெக்சிகன் அரசாங்கம்[30] போன்றோரின் வடிவமைப்பாளராகவும் இருந்தார்.
சல்மா நடிக்கும்போது, பெரும்பாலும் மெத்தட் ஆக்டிங் நடிப்பு முறையைப் பயன்படுத்துவார். ஃப்ரிடா கஹ்லோ என்ற பாத்திரத்தை சல்மா ஏற்று நடித்த போது, அந்த பாத்திரம் புகைப்பிடிப்பது போல் வரும் காட்சிகளுக்காக உண்மையிலேயே புகைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இதன் விளைவாக அவர் உண்மையிலேயே புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர் ஆனார். தற்போது இந்தப் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியில் உள்ளார்.
2007 மார்ச் 9 அன்று சல்மா PPR நிறுவனத்தின் CEO பிரான்சயிஸ் ஹென்றி பினல்ட் உடன் தனது முதல் குழந்தை உருவானதை உறுதிப்படுத்தினார். 2007 செப்டம்பர் 21 அன்று கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் சீடர்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டரில் அவருக்கு வாலெண்டினா பலோமா பினால்ட் என்ற பெண் குழந்தை பிறந்தது. 2008 ஜூலை 18 அன்று சல்மாவும் பினால்டும் தங்கள் நிச்சயம் முறிவானதை அறிவித்தனர்.[31] பின்னர் அவர்கள் இருவரும் தங்களது அன்பை உணர்ந்து கொண்டு 2009 ஆம் ஆண்டு பாரிஸில் வாலண்டைன்ஸ் டே அன்று திருமணம் செய்துகொண்டனர்.[32] 2009 ஏப்ரல் 25 அன்று வெனிசில் இரண்டாவது முறையாக அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.[33]
சமூகத் தொண்டுகள் [தொகு]
2005 ஜூலை 19 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை மறு அங்கீகரிப்பு செய்யும் பெஞ்ச்சின் U.S. செனட்டின் முன்பு சல்மா வாக்குமூலம் அளித்தார். தங்க இடமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புகலிடமான மெக்சிகோவில் உள்ள கோட்சகோல்கோஸுக்கு 25,000 டாலர்களை 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் வழங்கினார். மேலும் மாண்டெர்ரேவைச் சேர்ந்த நாட்டில் நடக்கும் வன்முறைக்கு எதிரான குழுவுக்கு மற்றொரு 50,000 டாலர்கள் வழங்கினார்.[34]
அவரது மகள் பிறந்ததிலிருந்து, சல்மா உலக நாடுகளில் தாய்மார்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக சேவை புரிந்தார். பாம்பெர்ஸ் மற்றும் UNICEF குழுக்களுடன் இணைந்து கர்ப்பமுற்றிருக்கும் தாய்க்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்பு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக உதவினார். இவர் பாம்பெர்ஸ்/UNICEF உடன் இணைந்து 1 Pack = 1 Vaccine என்ற விழிப்புணர்வை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு உதவும் நோக்கில் உலகளாவிய பிரதிநிதியாக உள்ளார்.[35]
மேலும் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை ஆதரித்து குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் உறுதியான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதன் நன்மைகள் போன்றவற்றை சல்மா வலுயுறுத்தி வருகிறார். UNICEF இன் உண்மை நிலையறியும் பயணத்திற்காக சியரா லியோன் சென்ற போது பிறந்த ஒருவாரமே ஆன பசியுடனிருந்த குழந்தைக்கு, தாயாருக்கும் பால் சுரக்காத நிலையில் இவர் தாய்ப்பாலூட்டினார்.[36]
வெகுமதிகள் [தொகு]
- 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிளாமர் பத்திரிக்கை வழங்கிய அந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருது பெற்றார்.[37]
- 2003 ஆம் ஆண்டில் புரொடியூசர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா வழங்கிய செலப்ரேசன் ஆப் டைவர்சிட்டி விருது பெற்றார்.[38]
- 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹார்வர்ட் பவுண்டேசனின் ஆர்ட்டிஸ்ட் ஆப் தி இயர் விருது பெற்றார்.[39]
- 2005 ஆம் ஆண்டில் டைம் பத்திரிக்கையின் 25 மிகவும் ஆற்றல் மிக்க ஹைஸ்பானிக்ஸ்களில் இடம் பெற்றார்.[40]
திரைப்பட விவரங்கள் [தொகு]
திரைப்படம் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1993 | மை வைடா லோகா | காடா | |
| 1994 | எல் கால்லிஜன் டி லாஸ் மிலக்ரோஸ் | அல்மா | (மிராக்கிள் அல்லே ) ஸ்பானிஷ்-மொழி சிறந்த நடிகைக்கான ஏரியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| 1995 | டெஸ்பெரேடோ | கரோலினா | சிறந்த துணை நடிகைக்கான சேடர்ன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| ஃபேர் கேம் | ரீடா | ||
| 1996 | ஃப்ரம் டஸ்க் டில் டான் | சாண்டனிகோ பெண்டமோனியம் | |
| ஃபாலோ மீ ஹொம் | பெட்டி | ||
| ஃப்ளெட் | கோரா | ||
| 1997 | ஃபூல்ஸ் ரஷ் இன் | இசபெல் ஃபுயண்டெஸ் | திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார் |
| பிரேக்கிங் அப் | மோனிகா | நேரடி வீடியோ வெளியிடப்பட்டது. | |
| சிஸ்டோல் டயாஸ்டோல் | கார்மெலிட்டா | ||
| தி ஹன்ச்பேக் | எஸ்மரால்டா | ||
| 1998 | 54 | அனிதா | திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார் |
| தி வெலாசிடி ஆப் கேரி | மேரி கார்மென் | தயாரிப்பாளர்; நேரடி வீடியோவாக வெளியிடப்பட்டது. | |
| தி ஃபேகல்ட்டி | நர்ஸ் ஹார்பர் | ||
| 1999 | டோக்மா | செரண்டிபிட்டி | |
| எல் கோரெனல் நோ டெயின் குவின் லெ எஸ்கிரிபா | ஜூலியா | (நோ ஒன் ரைட்ஸ் டு தி கலோனல் ) தயாரிப்பாளர்; ஸ்பானிஷ்-மொழி. |
|
| ஒயில்ட் ஒயில்ட் வெஸ்ட் | ரீடா எஸ்கோபர் | திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார் | |
| 2000 | டைம்கோட் | ரோஸ் | |
| லா கிரான் வைடா | லோலா | (லிவிங் இட் அப்) ஸ்பானிஷ்-மொழி | |
| செயின் ஆப் ஃபூல்ஸ் | Sgt. மேரெடித் கோல்கோ | நேரடி வீடியோவாக வெளியிடப்பட்டது. | |
| டிராஃபிக் | ரொசாரியோ | முக்கியத்துவமற்ற பாத்திரம் | |
| 2001 | ஹோட்டல் | சார்லீ பெளக்ஸ் | |
| 2002 | ஃப்ரிடா | ப்ரிடா கஹ்லோ | தயாரிப்பாளர் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான பாஸ்டன் சொசைட்டி ஆப் பிலிம் கிரிடிக்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மோசன் பிக்சர் நாடகத்துக்கான - சிறந்த நடிகருக்கான கோல்டம் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மோசன் பிக்சர் நாடகத்துக்கான - சிறந்த நடிகருக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| 2003 | ஸ்பை கிட்ஸ் 3-D: கேம் ஓவர் | பிரான்செஸ்கா ஜிக்லஸ் | |
| ஒன்ஸ் அப்-ஆன் எ டைம் இன் மெக்சிகோ | கரோலினா | ||
| V-டே: அண்டில் தி வயலென்ஸ் ஸ்டாப்ஸ் | அவராகவே தோன்றினார் | ||
| 2004 | அப்டர் தி சன்செட் | லோலா சிரில்லோ | |
| 2005 | சியன் கா'ஆன் | மரியா (குரல்) | |
| 2006 | ஆஸ்க் தி டஸ்ட் | கேமில்லா லோபஸ் | |
| பண்டிடாஸ் | சாரா சாண்டோவல் | ||
| 2007 | லோன்லி ஹார்ட்ஸ் | மார்த்தா பெக் | |
| அக்ராஸ் தி யுனிவர்ஸ் | பங்க் பங்க் சூட் சூட் நர்ஸஸ் | ||
| 2008 | பெவர்லி ஹில்ஸ் சிஹுவாஹ்வா | பாக்சி (குரல்) | |
| 2009 | தி வம்பயர்'ஸ் அசிஸ்டண்ட் | மேடம் ட்ருஸ்கா | |
| 2010 | க்ரோன் அப்ஸ் | (படப்பிடிப்பில் உள்ளது) |
தொலைக்காட்சி [தொகு]
| ஆண்டு | பெயர் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1988 | அன் நூயெவோ அமனேசர் | ஸ்பானிஷ்-மொழி டெலினோவெல்லா | |
| 1989 | தெரெசா | தெரெசா | ஸ்பானிஷ்-மொழி டெலினோவெல்லா |
| 1993 | தி சின்பட் ஷோ | அடிக்கடிவரும் பாத்திரம் | |
| 1994 | ரோட்ரேசர்ஸ் | டோன்னா | |
| எல் உய்லோ டெல் அக்விலா | ஜ்வானா காடா | ஸ்பானிஷ்-மொழி டெலினோவெல்லா | |
| 1997 | தி ஹன்ச்பேக் | எஸ்மரால்டா | தொலைக்காட்சித் திரைப்படத்தில் அல்லது சிறு தொடரில் குறுக்கிடும் பாத்திரத்தில் தனிப்பட்ட சிறந்த நடிப்புக்கான ALMA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
| 1999 | ஆக்சன் | அவராகவே தோன்றினார் | சிறப்புத் தோற்றம் |
| 2001 | இன் தி டைம் ஆப் பட்டர்பிளைஸ் | மினெர்வா மிராபெல் | தயாரிப்பாளர்; நடித்தார் தொலைக்காட்சித் திரைப்படம் அல்லது சிறுதொடரில் சிறந்த நடிகர்/நடிகைக்கான ALMA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் தொலைக்காட்சிக்காக உருவாக்கப்படும் திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஸன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| 2003 | டி மால்டொனாடொ மிராக்கிள் | நடிகை; தயாரிப்பாளர், இயக்குநர். குழந்தைகள்/இளைஞர்கள்/குடும்பம் இவற்றில் சிறந்த இயக்குனருக்கான சிறப்பு எம்மி விருது பெற்றார். | |
| சேட்டர்டே நைட் லைவ் | சிறப்புத் தோற்றம் | மார்ச் 15 | |
| 2006 | அக்லி பெட்டி | சோபியா ரெயீஸ் | தயாரிப்பாளர் மற்றும் சிறப்புத் தோற்றம் காமெடித் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான பிரைம்டைம் எம்மி விருது — 2007 ஆம் ஆண்டிற்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த காமெடித் தொடருக்கான பிரைம்டைம் எம்மி விருது — 2007 ஆம் ஆண்டிற்கு பரிந்துரைக்கப்பட்டது புரொடியூசர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சி தயாரிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| 2009 | 30 ராக் | எலிசா | சிறப்புத் தோற்றம் |
| 2011 | செவன் பிரண்ட்ஸ் ஆப் பாஞ்சோ வில்லா அண்ட் வுமென் வித் சிக்ஸ் பிங்கர்ஸ் | TBA | தயாரிக்கப்படவுள்ளது |
நிகழ்வுகளில் பங்குபெற்றது [தொகு]
- 2005 கேன்ஸ் திரைப்படவிழா ஜூரியில் உறுப்பினராகப் பங்கு பெற்றார்.[41]
- 2005 டிசம்பர் 11 அன்று நார்வேயில் உள்ள ஓஸ்லோவில் ஜீலியன்னெ மூருடன் நோபல் அமைதி பரிசுக்கான கலைநிகழ்ச்சியில் தோன்றினார்.[42]
குறிப்புகள் [தொகு]
- ↑ "Reuters.com."
- ↑ Galloway, Stephen (2007-07-26). "THR's Latino Power 50". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/hr/content_display/film/features/e3i08b80be8ba1477a7111e18b474e8366a.
- ↑ "Salma Hayek tops sexiest celebs list". MSNBC. 2007-07-11. http://www.msnbc.msn.com/id/19718502/.
- ↑ "Salma Hayek, Ugly Betty | 25 Smartest People in TV". Entertainment Weekly. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ லவ், பிரெட் (மார்ச் 2003). "தி பியூட்டிபுல் மைண்ட் ஆப் சல்மா ஹாயெக்". ரேசர் பத்திரிக்கை , ப. 48.
- ↑ "Salma Hayek Biography (1966?-)". filmreference.com. பார்த்த நாள் 2008-02-19.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Salma Hayek". Lipton, James (host). Inside the Actors Studio. Bravo. 2004-12-05. No. 1105, season 11.
- ↑ "Salma Hayek Biography". Biography.com. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ ட்ரான் ப்ரம் லைப்
- ↑ Sullivan, Robert (June 2005) (– Scholar search), Free Spirit, Vogue, http://www.style.com/vogue/feature/052305/page2.html
- ↑ "Ariel > Ganadores y nominados > XXXVII 1995" (Spanish). Academia Mexicana de Artes y Ciencias Cinematográficas. பார்த்த நாள் 2008-02-19.
- ↑ "Stella Adler Alumni". stellaadler-la.com. பார்த்த நாள் 2008-02-19.
- ↑ Oprah's Cut with Salma Hayek, O, The Oprah Magazine, September 2003, http://www.oprah.com/omagazine/200309/omag_200309_ocut.jhtml
- ↑ "El coronel no tiene quien le escriba, de Arturo Ripstein representará a México en los Premios Oscar" (in Spanish). El Mundo. 1999-11-06. http://www.elmundo.es/1999/11/06/cultura/06N0104.html.
- ↑ National Academy of Television(2004-05-14). "The 31st Annual Creative Craft Daytime Emmy Awards". Press release.
- ↑ "Prince and Salma Hayek Create 'Te Amo Corazon'". PRNewswire. 2005-12-12. http://www.prnewswire.com/cgi-bin/stories.pl?ACCT=104&STORY=/www/story/12-12-2005/0004232338.
- ↑ "Academy of Television Arts & Sciences". Emmys.org. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "News: Salma Hayek". Truly Hollywood. 2007-04-09. http://www.trulyhollywood.com/articles.php?req=read&articleId=406.
- ↑ Siegel, Tatiana; Andreeva, Nellie (2007-05-15). "Hayek sits pretty with ABC deal". Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/hr/content_display/television/news/e3i289264b713379249ab47612fec62e6a2.
- ↑ "Salma Hayek joins Sandler comedy". Variety. 2009-03-17. http://www.variety.com/article/VR1118001338.html?categoryid=13&cs=1. Retrieved 2009-03-21.
- ↑ "Avon Foundation Newsroom". Avon Company. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ வனிக அறிக்கை.(பெண்களின் வாசனைத்திரவியங்கள்)(புள்ளி விவரம் இணைக்கப்பட்டது) - நாளேடு, பத்திரிக்கை, கட்டுரை, பருவ இதழ்கள்
- ↑ "MediaPost Publications". Publications.mediapost.com (2007-02-12). பார்த்த நாள் 2009-05-10.
- ↑ MetaVisia. "Revista De Relojes Y Joyas". Diezydiez. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "MySA.com: Visual Arts". Mysanantonio.com. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "Salma Hayek Biography". People. பார்த்த நாள் 2008-02-19.
- ↑ "Ramtha's School of Enlightenment, the School of Ancient Wisdom" (2006). பார்த்த நாள் 2006-10-21. "Having been a skeptic for most of my life, Ramtha has taught me about the possibilities we all have to influence reality using science to explain the mechanics in a way that finally makes sense to me. His technique on creating the day has been very effective in my life."
- ↑ "Sami Hayek". People Magazine (2004-12-13). பார்த்த நாள் 2008-08-03.
- ↑ "Latest News". Sami Hayek Official Site. பார்த்த நாள் 2008-08-03.
- ↑ "Press Kit" (PDF). Sami Hayek Official Site. பார்த்த நாள் 2008-08-03.
- ↑ சல்மா ஹாயெக், பைனால்ட் ரத்துசெய்யப்பட்ட நிச்சயம்
- ↑ (பிரெஞ்சு) பிரான்சயிஸ் ஹென்றி பினல்ட் et Salma Hayek se sont mariés - lepoint.fr, பிப்ரவரி 16, 2009
- ↑ ஸ்டார்-லெட்ஜர் கட்டுரை வினைஸில் மறுதிருமணம்
- ↑ "Hayek helps groups aiding battered women". USA Today. 2006-02-14. http://www.usatoday.com/life/people/2006-02-14-hayek_x.htm.
- ↑ "Reuters.com". Africa.reuters.com (2009-02-09). பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "Salma Hayek Breastfeeds African Baby (VIDEO)". Huffingtonpost.com. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "Glamour Awards Laud Afghan Woman". Rawa.org (2001-10-31). பார்த்த நாள் 2009-05-10.
- ↑ Celebration of Diversity - The Producers Guild of America
- ↑ Harvard News Office (2006-03-02). "Salma Hayek hosts Cultural Rhythms". Harvard Gazette. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "Salma Hayek". Time. http://www.time.com/time/nation/article/0,8599,1093652,00.html. Retrieved 2009-05-10.
- ↑ "Cannes festival opens with drama". BBC NEWS. 2005-05-11. http://news.bbc.co.uk/2/hi/entertainment/4533671.stm.
- ↑ Winters Keegan, Rebecca (2006-01-01). "People". Time. http://www.time.com/time/magazine/article/0,9171,1145227,00.html.