சபி பரம்பில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபி பரம்பில்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2011 (2011-06-01)
முன்னையவர்கே. கே. திவாகரன்
தொகுதிபாலக்காடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1983 (1983-02-12) (அகவை 41)
பட்டாம்பி, பாலக்காடு, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அஷீலா அலி
பிள்ளைகள்1
பெற்றோர்(கள்)
  • ஷானவாஸ் பரம்பில்
  • மைமூனா ஷானவாஸ்
வாழிடம்பாலக்காடு

சபி பரம்பில் (Shafi Parambil) (பிறப்பு 12 பிப்ரவரி 1983) ஒரு இந்திய அரசியல்வாதியும், 14வது கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர்[2] இவர் பாலக்காடு சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]

பரம்பில் கேரள மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் போது, கேரள மாணவர் ஒன்றிய அலுவலகப் பொறுப்பாளராகவும், கல்லூரி ஒன்றியத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். பரம்பில் 2007 இல் மாநில பொதுச் செயலாளராகவும், 2009 இல் மாநிலத் தலைவராகவும் ஆனார்.[4]

2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 இல், இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக ஆனார்.[5] பின்னர் ஒரு வருடம் கழித்து இப்பதவியிலிருந்து விலகினார்.[6] தற்போது இந்திய இளைஞர் காங்கிரசின் மாநில தலைவராக உள்ளார். 2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் ஈ. சிறீதரனை 3480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7]

சொந்த வாழ்க்கை[தொகு]

சபி, 1983 பிப்ரவரி 12 அன்று காரக்காட்டில் ஷானவாஸ் பரம்பில் மற்றும் மைமூனா ஷானவாஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டதாரியான இவர் அஷீலா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

முகநூலில் சபி பரம்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs of Kerala Legislative Assembly". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  2. "Members - Kerala Legislature". Archived from the original on 21 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  3. "Members - Kerala Legislature". Archived from the original on 21 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://www.niyamasabha.org/codes/14kla/Members-Eng/114%20Shafi%20Parambil.pdf
  5. "Youth Congress gets six General Secretaries". Business Standard India. 2018-02-25. https://www.business-standard.com/article/news-ians/youth-congress-gets-six-general-secretaries-118022500008_1.html. 
  6. "യൂത്ത് കോൺഗ്രസ് ദേശീയപദവി രാജി വെച്ചതെന്ന് ഷാഫി പറമ്പിൽ". Malayalam (in மலையாளம்). 2018-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  7. "BJP's E Sreedharan loses, Shafi Parambil retains Palakkad in photofinish". https://www.thenewsminute.com/article/bjp-s-e-sreedharan-loses-shafi-parambil-retains-palakkad-photo-finish-148171. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபி_பரம்பில்&oldid=3929577" இலிருந்து மீள்விக்கப்பட்டது