சத்யப்ரியா பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்யப்ரியா பானர்ஜி (Satyapriya Banerjee)(பிறப்பு 25 ஆகஸ்ட் 1893, டி. 1957[1][2]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியும் ஆவார்.

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

பானர்ஜி கல்விக்காக பெர்லின் சென்றார். இவர் இளங்கலை கலை மற்றும் இளங்கலை சட்டப் பட்டங்களைப் பெற்றார். 1920ல் சமாஜ் சேவக் சங்கத்தை நிறுவினார்.[1] 1928ல் அனைத்து வங்காள வாலிபர் சங்கத்தின் நிறுவன செயலாளரானார்.[3]

சுதந்திரத்திற்கான போராட்டம்[தொகு]

பானர்ஜி வங்காள மாகாண காங்கிரஸ் குழுவின் செயலாளராக பணியாற்றினார். சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாகப் பணியாற்றிய இவர், போஸுடன் இணைந்து இந்தியத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கை நிறுவினார். இதில் பானர்ஜி செயலாளராக பணியாற்றினார்.[1] பானர்ஜி 1937 மற்றும் 1945ஆம் ஆண்டுகளுக்கிடையில் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும், 1946-1947ஆம் ஆண்டு மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1] இந்தியப் பிரிப்பின் போது பானர்ஜி ஐக்கிய மத்திய அகதிகள் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டார்.[4]

தொழிற்சங்கவாதி[தொகு]

பானர்ஜி வங்காள மாகாண தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும், அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

பவ்பஜார் தேர்தல்[தொகு]

பானர்ஜி 1952 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போபஜாரில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரது வேட்புமனுவை பல்வேறு இடதுசாரி கட்சிகள் ஆதரித்தன. பானர்ஜியைக் காங்கிரசு வேட்பாளர் பிதான் சந்திர ராய் தோற்கடித்தார்.[5] ராய் 13,910 வாக்குகள் பெற்றார், பானர்ஜி 9,799 வாக்குகள் (41.33%) பெற்றார்.[6] தேர்தல் முடிந்த மறுநாள் கலவரம் வெடித்தது.[5]

பார்வர்ட் பிளாக்கில் பிளவு[தொகு]

1952ஆம் ஆண்டில் இவர் மாநிலக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியிலிருந்தார்.[7] கட்சிக்குள், இடதுசாரிப் போக்கின் முக்கிய உறுப்பினராக பானர்ஜி இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியுடன் ஒத்துழைப்பதில் அக்கட்சி வேறுபட்டது. கல்கத்தா தென்கிழக்கு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலின் போது மோதல் அதிகரித்தது (தற்போதைய சியாமா பிரசாத் முகர்ஜியின் மரணத்திற்குப் பிறகு). பானர்ஜியின் குழு அதிகாரப்பூர்வ பார்வர்டு பிளாக் வேட்பாளரை ஆதரிக்காமல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளரான சாதன் குப்தாவினை ஆதரித்தது.[8] பானர்ஜி, அமர் போஸ் மற்றும் சுஹுரித் சவுத்ரி ஆகியோருடன் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் செயற்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[9] இந்நேரத்தில் பானர்ஜி கட்சியின் ஒரே தேசிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[10] பானர்ஜியும் மற்ற வெளியேற்றப்பட்டவர்களும் ஏப்ரல் 1954-இல் மார்க்சிஸ்ட் பார்வர்டு பிளாக்கை நிறுவினர்.[7][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sud, S. P. Singh, and Ajit Singh Sud. Indian Elections and Legislators. Ludhiana: All India Publications, 1953. pp. 168-169
  2. Lok Sabha Debates, Part 2, Vol. 4, Ed. 1. Lok Sabha Secretariat., 1957. p. 69
  3. Saha, Panchanan. Dr. Bhupendranath Dutta: Revolutionary Patriot. Kolkata: Biswabiksha, 2004. p. 106
  4. Bengal: Past and Present, Vol. 119. Calcutta Historical Society., 2000. p. 167
  5. 5.0 5.1 Chakrabarty, Saroj, Jawaharlal Nehru, and Bidhan Chandra Roy. With Dr. B.C. Roy and Other Chief Ministers: A Record Upto 1962. Calcutta: Benson's, 1974. p. 196
  6. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL
  7. 7.0 7.1 Communist Party of India (Marxist). Election Results of West Bengal: Statistics & Analysis, 1952-1991, Vol. 1. Calcutta: The Committee, 1995. p. 650
  8. Saha, Sanghamitra. A Handbook of West Bengal, Vol. 1. Thiruvananthapuram: International School of Dravidian Linguistics, 1998. p. 153
  9. 9.0 9.1 Shashi, Shyam Singh. Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. New Delhi: Anmol Publications, 1996. p. 132
  10. Weiner, Myron. Party politics in India. 1972. p. 127
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யப்ரியா_பானர்ஜி&oldid=3528115" இலிருந்து மீள்விக்கப்பட்டது