சடாமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சடாதாரிகளான இரண்டு சாதுக்கள்.[1]

சடாமுடி அல்லது பிரிசடை ( dreadlocks, மேலும் locs, dreads) ( சமசுகிருதம்: Jaṭā,) [1] என்பது கயிறு அல்லது பிரி போன்ற படர்பின்னல் அல்லது பின்னப்பட்ட முடி ஆகும்.[2] சடாமுடியின் பழங்கால சித்தரிப்புகளானது 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.[3]

தோற்றுவாய்கள்[தொகு]

நீண்ட சடாமுடி கொண்ட இளம் குத்துச்சண்டை வீரர்களை சித்தரிக்கும் சுவரோவியம், அக்ரோடிரி (நவீன சாண்டோரினி, கிரீஸ்) கி.மு. 1600-1500.[3][4][5]

சடாமுடியின் ஆரம்பகால சித்தரிப்புகளில் சில 3600 ஆண்டுகளுக்கு முந்தியதானதும், ஐரோப்பாவின் ஆரம்பகால நாகரிகங்களில் ஒன்றான மினோவான் நாகரிக காலத்தில் காணப்படுகிறது. இந்த நாகரிகமானது இது கிரீட்டை மையமாகக் கொண்டது (இப்போது இது கிரேக்கத்தின் ஒரு பகுதி).[3] ஈஜியன் தீவான தேராவில் (நவீன சாண்டோரினி, கிரீஸ்) கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் நீண்ட சடாமுடி முடி கொண்ட நபர்களை சித்தரிக்கப்படுகின்றன.[3][4]

பண்டைய எகிப்தில், பின்னப்பட்டட்டப்பட்ட சடாமுடி மற்றும் பொய் முடி அணிந்த எகிப்தியர்களைக் காட்டும் புடைப்புச் சிற்பங்கள், சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் காணப்படுகின்றன.[6] பின்னப்பட்ட சடாமுடியுடன் பூட்டிய பொய் முடிகளுடன் கூடிய பண்டைய எகிப்தியர்களின் மம்மிகளை தொல்லியலாளர்கள் எடுத்துள்ளனர்.[7]

மேலும் வெண்கலக் காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களேச் சேர்ந்த அண்மைக் கிழக்கு, அனத்தோலியா, காக்கேசியா, கிழக்கு நடுநிலம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சுமேரியா, ஈலாம், பண்டைய எகிப்து, பண்டைக் கிரேக்கம், அக்காடியப் பேரரசு, அசிரியா, பபிலோனியா, இட்டைட்டு பேரரசு, அமோரிட்டு, மித்தானி இராச்சியம், அத்தாயன், ஜுரியத், அரமேயர்கள், எப்லா, இஸ்ரேலியர்கள், பிரிகியர்களின், லிடியன்ஸ்சே, பெர்சியர்கள், மீடியார்கள், பார்தியர்கள், சலேடியர், ஆர்மேனியர்கள், ஜார்ஜியன்கள், அசீரியர், சிலிசியா மற்றும் கானானியர் / ஃபொனீஷியன்ஸ் / கார்தாஜினிசீயர்கள் போன்ற பல பண்டைய பல மக்களினத்தவர்கள் சடாமுடி, தாடி ஆகியவற்றுடன் கொண்டதாக அவர்களின் கலை வேலைப்பாடுகள் சித்திரிக்கின்றன.[8][9][10]

கலாச்சாரத்தில்[தொகு]

இந்து மதம்[தொகு]

இந்து வேத வரிகளானது சடாமுடி குறித்த தொன்மையான சான்றுகளை வழங்குகின்றன. இந்தியாவில் சாதுக்கள் அல்லது துறவிகள் சடாமுடி கொண்டவர்களாக உள்ளனர். குறிப்பாக சிவபெருமானை முதன்மையாக வழிபடும் சந்நியாசிகள் தங்களது சடாமுடியை தலை உச்சியில் முடிந்தவர்களாக இருப்பர். இவர்கள் முடியப்பட்ட இந்த சடாமுடிகளை சிறப்பு நாட்களிலில் அல்லது சடங்குகளின்போது மட்டுமே அவிழ்த்து கீழே விடுகின்றனர். இந்தியவில் இந்துக்களில் இருபாலினரும் சடாமுடியை புனிதமானதாகக் கருதுகின்றனர். இது துறவிகளிடையே ஒரு சமய வழக்கமாக பின்பற்றப்படுகிறது. மேலும் இது பகட்டை புறக்கணிப்பதன் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. சைவ ஆதீன கர்தர்கள் குறிப்பாக தரும்புர ஆதீன கர்த்தர்கள் சடாமுடியை பராமரிப்பது குறித்து உ. வே. சாமிநாதையர் குறிப்பிடும்போது, சடையுள்ளவர்கள் எண்ணைத் தேய்த்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அதற்கு பதில் மிளகு முதலிய சிறு பொருட்களை பால்விட்டு அரைத்து தேய்த்து தலையை உலர்த்துவர் இதற்குப் பெயர் மிளகு காப்பு என்பதாகும் என்கிறார்.[11]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Hair: Styling, Culture and Fashion. University of Michigan [Michigan]: Bloomsbury Academic. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845207922. "His jata (dreadlocks) are elegantly styled, and the source of the Ganges issues from his topknot. In the background are the Himalayas where Shiva performs his austerities." 
  2. Merriam-Webster, Merriam-Webster (2004). Merriam-Webster's Collegiate Dictionary: Eleventh Edition. [ ]: Merriam-Webster. பக். 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780877798095. "dread-lock \'dred-,lak\ n (I960) 1 : a narrow ropelike strand of hair formed by matting or braiding 2 pi : a hairstyle consisting of dreadlocks — dread-locked \-,lakt\ adj" 
  3. 3.0 3.1 3.2 3.3 BLENCOWE, CHRIS (2013). YRIA: The Guiding Shadow. Sidewalk Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780992676100. "... Archaeologist Christos Doumas, discoverer of Akrotiri, wrote: “Even though the character of the wall-paintings from Thera is Minoan, ... the boxing children with dreadlocks, and ochre-coloured naked fishermen proudly displaying their abundant hauls of blue and yellow fish."  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Blencowe 20132" defined multiple times with different content
  4. 4.0 4.1 Poliakoff, Michael B. (1987). Combat Sports in the Ancient World: Competition, Violence, and Culture. Yale University Press. பக். 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780300063127. https://archive.org/details/combatsportsinan0000poli. "The boxing boys on a fresco from Thera (now the Greek island of Santorini), also 1500 B.C.E., are less martial with their jewelry and long braids, and it is hard to imagine that they are engaged in a hazardous" 
  5. Bloomer, W. Martin (2015). A Companion to Ancient Education. John Wiley & Sons. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781119023890. "Figure 2.1b Two Minoan boys with distinctive hairstyles, boxing. Fresco from West House, Thera (Santorini), ca. 1600–1500 bce (now in the National Museum, Athens)." 
  6. "Image of Egyptian with locks". freemaninstitute.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  7. Egyptian Museum -"Return of the Mummy. பரணிடப்பட்டது 2005-12-30 at the வந்தவழி இயந்திரம் Toronto Life - 2002." Retrieved 01-26-2007.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-04-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-20.
  9. "plaits". www.ancient-origins.net. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  10. Gabbara, Princess (2016-10-18). "The History of Dreadlocks". EBONY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  11. உதிர்ந்த மலர்கள் (2016). நல்லுரைக்கோவை (மூன்றாம் தொகுதி). சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலையம். பக். 490. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடாமுடி&oldid=3766133" இலிருந்து மீள்விக்கப்பட்டது