சங்கீதா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா யாதவ்
சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) 17ஆவது சட்டப் பேரவை உத்தரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2017
முன்னையவர்ஜெய் பிரகாசு நிசாத்
தொகுதிசௌரி-சௌரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூலை 1981 (1981-07-20) (அகவை 42)
போரிவலி, மும்பை, மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
அஜய் குமார் (தி. 2009)
பிள்ளைகள்1
வாழிடம்(s)கோரக்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
கல்விஇளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிஎம் எம் எச் கல்லூரி, காசியாபாத்
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்
வேலைசட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)
தொழில்வணிகம்

சங்கீதா யாதவ் (Sangeeta Yadavv) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள சௌரி-சௌரா (சட்டமன்றத் தொகுதி)யில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

சங்கீதா, 1981 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மகாராட்டிராவின் மும்பையிலுள்ள போரிவலியில் ஆர்.பி. யாதவ் என்பவருக்கு பிறந்தார். 2009 இல், இவருக்கு அஜய் குமார் (வருமான வரி இணை ஆணையர்) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. [2] சங்கீதா பிற்படுத்தப்பட்ட வகுப்பு ( யாதவர் ) சமூகத்தைச் சேர்ந்தவர். 2004 இல் காசியாபாத் எம் எம் எச் கல்லூரியில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார் [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சங்கீதா யாதவ் , உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டப் பேரவைத் தேர்தலில் (2017) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் சௌரி-சௌரா (சட்டமன்றத் தொகுதி) விலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மனோரஞ்சன் யாதவை 45,660 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

சான்றுகள்[தொகு]

  1. "Candidate affidavit". my neta.info. http://www.myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=4773. பார்த்த நாள்: 3 December 2018. 
  2. "सदस्य उत्तर प्रदेश विधान सभा". uplegisassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
  3. "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  4. "Chauri-Chaura Election Results 2017". elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_யாதவ்&oldid=3622415" இலிருந்து மீள்விக்கப்பட்டது