சகீலா
| சகீலா | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 19, 1973 இந்தியா |
| வேறு பெயர் | ஷாக்கு |
| தொழில் | திரைப்பட நடிகை |
சகீலா (Shakeela)(பிறப்பு: நவம்பர் 19, 1973 ) குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் விளையாட்டு பெண் (play girls) என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
திரை வாழ்க்கை [தொகு]
மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்தரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.
மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரை திரையுலகத்தினர் "Cyclone" "லேடி லால்” என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். [1]
| வருடம் | திரைப்படம் | மொழி |
|---|---|---|
| 2011 | நின்டி | கன்னடம் |
| 2011 | தேஜா பாய் & பேமலி | மலையாளம் |
| 2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | தமிழ் |
| 2010 | மாஞ்சா வேலு | தமிழ் |
| 2009 | சிவா மனசுல சக்தி | தமிழ் |
| 2007 | அழகிய தமிழ் மகன் | தமிழ் |
| 2007 | சொட்டா மும்பை | மலையாளம் |
| 2006 | பங்காரம் | தெலுங்கு |
| 2003 | ஜெயம் | தமிழ் |
| நீல தடகத்திலே நிழல் பக்ஷிகள் | மலையாளம் |