கூட்டெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூட்டெரு, அல்லது கலப்புரம், அல்லது குப்பையுரம், அல்லது மக்கியுரம் என்பது கரிம/ சேதன சேர்வைகள் மக்கவிடப்பட்டு அல்லது உருச்சிதைக்கப்பட்டு (decompose), வளம் குறைந்த மண்ணின் வளத்தை மீண்டும் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு உரமாகும். இந்த கூட்டெருப் பயன்பாடு இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கியமான செயலாகும். பயிர்ச்செய்கைக்கு அவசியமான மண்ணின் வளத்தைக் கூட்டும் செயற்பாட்டில், பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை வழங்க இந்த உரம் பயன்படும். இது தோட்டங்களிலும், வயல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்கள்[தொகு]

  • கழிவுகளை தவிர்த்து சூழல் மாசுறுதலைத் தவிர்க்கலாம்
  • மண் வளத்தைப் பேணலாம்
  • நச்சுத் தன்மை இல்லை
  • பயிர்த்தொழிலாளருக்கு வருமானம் அதிகரிக்கும்

முறைகள்[தொகு]

கூட்டெரு உருவாக்க ஒரு எளிய முறை ஒரு குழி ஒன்றை தோண்டி கழிவுகளை இடுவதாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் 3 அடி ஆழம் வரை தோண்டி, ஆகக் கீழே நன்கு உக்கிய மாட்டெருவை இடுவர். அதன் மேல் 1 அடி அளவில் மரச்சாம்பல், இதர சேதனக்கழிவுகள், சாணம் போன்றவற்றை இடுவர்.

சேதனக் கழிவுகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, பின்னர் நீரும் வழங்கப்படும். தகுந்த முறையில் பாக்டீரியாக்களால் உருச்சிதைவு ஏற்படுத்துவதற்காக, அவற்றிற்குத் தேவையான வளையை வழங்குவதற்காக, அந்தக் கழிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புரட்டிப் போடப்படும். கூட்டெரு முக்கியமாக இரு முறைகளில் தயார் செய்யப்படுவதுண்டு. அவை குவியல் முறை, மற்றும் குழி முறையாகும். இந்த முறைகளை அடிப்படையாகக் கொண்டு, வேறு பல வடிவங்களில் நவீன கூட்டெருத் தயாரிப்பு முறைகள் கையாளப்படுகின்றன.

குவியல் முறை[தொகு]

சேதனக் கழிவுகளை நிலத்தின் மேலே குவித்துத் இயற்கை உரம் தயாரிக்கப்படும்.

குழி முறை[தொகு]

சேதனக் கழிவுகளை நிலத்திற்குக் கீழாக குழி தோண்டி, அதனுள் இட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டெரு&oldid=1554661" இருந்து மீள்விக்கப்பட்டது