குப்பிச்சிபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குப்பிச்சிபாளையம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் வட்டம் பரமத்தி வேலூர் தேர்வுநிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட சிற்றூர் ஆகும். வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் வழியில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் உள்ளது.

பெயர்க்க்காரணம்[தொகு]

குப்பிச்சி என்னும் வீரனுக்குப் பட்டயம் செய்யப்பட்ட ஊர் குப்பிச்சிப் பாளையம். [1]

மக்கள்[தொகு]

இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர், குறிப்பாக கொங்கு வேளாளர், வன்னியர், ஆகிய சாதியினர் மிகுதியாக வசிக்கின்றனர்.

அமைப்பு[தொகு]

காவிரி ஆற்று வாய்க்கால் பாசனம் பெற்ற நீர்வளம் உடைய ஊர். நஞ்சை இடையாறு, பரமத்தி-வேலூர், பரமத்தி, கரூர், முதலியன எல்லைப் பகுதிகளாகும்.

தொழில்[தொகு]

உழவுத் தொழிலே இங்கு நடைபெறுகின்றது. வெற்றிலைக் கொடிக்கால் இவ்வூரின் முக்கியப் பயிர். நெல், கரும்பு, வாழை, தேங்காய் ஆகியவை பயிர் செய்வதும் உண்டு.

வழிபாடு[தொகு]

மாரியம்மன், பகவதி அம்மன் ஆகிய பெண்தெய்வக் கோயில்கள் இவ்வூரில் உள்ளன. கட்டிச்சோத்துக் கருப்பனார், பொன்காளியம்மன் ஆகிய கோயில்களும் உள்ளன.

பங்குனி மாதம், கொண்டாடப்படும் நஞ்சை இடையாறு பொன்காளியம்மன் குன்டத்திருவிழா(60 அடி நீளம்) பிரசித்தி பெற்ற ஒன்று. ஆண்கள் மட்டுமே தீக்குன்டத்தில் இறங்க அனுமதிக்கப்படுவர். பெண்கள் பூவாரி இரைத்தல் முறை மூலம் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. குப்பன் என்னும் ஆண் மகனைக் "குப்பிச்சி" என வழங்குதல் மரியாதைக் குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பிச்சிபாளையம்&oldid=2506750" இலிருந்து மீள்விக்கப்பட்டது