கிளி
| கிளி | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
| Systematics | ||||||||
|
(but see below) Family Cacatuidae (cockatoos)
Family Psittacidae (true parrots)
|
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. கிளிகள் zygodactyl, அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன. கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை. ஆத்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன.
பழங்களும் கொட்டைகளும் கிளிகளின் முக்கிய உணவு. கிளிகள் மாந்தரின் பேச்சைக் கேட்டு அதைப்போலவே ஒலி எழுப்ப வல்லவை. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet)