கிளாடியா தெ இராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடியா தெ இராம்
Claudia de Rham
பிறப்பு29 மார்ச்சு 1978
படித்த கல்வி நிறுவனங்கள்கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் EPFL
அறியப்படுவதுபெருந்திரள் ஈர்ப்பு

கிளாடியா தெ இராம் ((Claudia de Rham) ஒரு சுவிசு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார், இவர் ஈர்ப்பு அண்டவியல், துகள் இயற்பியல் ஆகியவற்றின் இடைமுகத்தில் பணிபுரிகிறார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று வருகிறார். பெருந்திரள் ஈர்ப்பு கோட்பாட்டை புத்துயிர் பெறச் செய்ததற்காக 2018-ஆம் ஆண்டில் இளம் அறிவியலாளர்களுக்கான பிளேவட்னிக் விருதுக்கான இயல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் இங்கிலாந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார், 2020 ஆம் ஆண்டில் விருதை வென்றார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் இலவுசான்னியில் பிறந்தார்.[1] 2000 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள எக்கோல் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியலில் பொறியியல் பட்டம் பெற்று பிரான்சில் தனது இளங்கலை படிப்பை முடித்தார்.[2] 2001 ஆம் ஆண்டில் (எக்கோல் பாலிடெக்னிக் ஃபெடரல் டி லாசான்- ஈ. பி. எஃப். எல்) இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] 2002 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்துக்குச் சென்றார் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம், கோட்பாட்டு இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] அவர் ஒரு விமானியாகப் பயிற்சி பெற்று, ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரர் தேர்வு செயல்முறையின் பல கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆராய்ச்சி[தொகு]

தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு, இவர் மாண்ட்ரீலுக்குச் சென்று மெக்கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் சேர்ந்தார்.[4][5] அவர் 2006 இல் மெக்மாசுட்டர் பல்கலைக்கழகம், கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்திற்குச் சென்றார் , அங்கு அவர் அண்டவியலில் கூட்டு முதுமுனைவர் பதவியில் பணியாற்றினார்.[6] 2010 ஆம் ஆண்டில் அவர் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார்.[7][8] அவர் 2011 இல் கேசு வெசுட்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2016 இல் அங்கு இணைப் பேராசிரியராக ஆனார்.[9][10] அவர் 2016 இல் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டில் அரசு கழகத்தின் " அண்டவியல் முதல் செறிநிலைப் பொருள் அமைப்புகள் வரையிலான பெருந்திரள் ஈர்ப்பு " பணிக்காக100,000 பவுண்டு வொல்ப்சன் தகைமை விருது அவருக்கு வழங்கப்பட்டது.[11][12]

அவரது ஆராய்ச்சி கோட்பாட்டு அண்டவியல் பகுதியில் உள்ள அண்டத்தின் முடுங்கிய விரிவாக்கத்தை விளக்கக்கூடிய ஈர்ப்பு ழ்படிமங்களை அவர் ஆராய்ச்சி செய்தார் இவர் பெருந்திரள் ஈர்ப்பு கோட்பாடுகளின் வளர்ச்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக ஏற்கப்படுகிறார் , அங்கு ஈர்ப்பு விசையின் ஏந்தியான ஈர்ப்பன் பெரியதாக இருக்கலாம்.[13] 2010 ஆம் ஆண்டில் இவர் பெருந்திரள் ஈர்ப்பு விசையின் ஒரு நேரியல் கோட்பாட்டை உருவாக்கினார் , இது கோட்பாட்டளவில் பொருத்தன புனைவு ஏதும் இல்லாத கோட்பாடாகும்.[14][15] டி ராம், கிரிகோரி கபடாட்சே, ஆந்திரூ ஜே. தோலி ஆகியோரின் கண்டுபிடிப்பின் காரணமாக, இந்தப் பெருந்திரள் ஈர்ப்பு இப்போது " டி ராம் - கபடாட்சே - தோலி " (dRGT) ஈர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.[14] இவரது ஆராய்ச்சி அண்டவியல் மாறிலி சிக்கலை சமாளிக்க உதவுகிறது. மேலும், அண்டத்தின் முடுங்கிய விரிவாக்கத்தை முற்றிலும் ஈர்ப்பு விளைவு என்று விவரிக்க முடியும். இங்குஈந்தப் பெரிய ஈர்ப்பு விசைகள் இருண்ட ஆற்றல் என்று அழைக்கப்படுகின்றன.[2]

2015 ஆம் ஆண்டில் இவர் ஈர்ப்பனின் இயல்பு என்ற தலைப்பில் ஒரு TEDx உரையை வழங்கினார்.[13][16] இயற்பியலில் பெண்களின் குறைவான பேராண்மை குறித்து சாலைக்காட்சு எண்ணக்கருக்கள்வழி விவாதித்துள்ளார். அவர் கோட்பாட்டு அண்டவியல் பற்றி வழக்கமாக பல பொது சொற்பொழிவுகளை வழங்குகிறார்.[17][18]

விருதுகளும் தலைமைப் பாத்திரங்களும்[தொகு]

  • 2023:1923 அமெரிக்கக் கலை அறிவியல் கல்விக்கழகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2020: இளம் அறிவியலாளர்களுக்கான பிளாவட்னிக் விருது வெற்றியாளர், இங்கிலாந்து இயல் அறிவியல், பொறியியல் புலம்[19]
  • 2018:18 புனித ஜான்சு கல்லூரி கேம்பிரிட்ஜ் ஆடம்சு பரிசு[20]
  • 2018: இளம் அறிவியலாளர்களுக்கான பிளாவட்னிக் விருது இறுதிப் போட்டியாளர், இங்கிலாந்து இயல் அறிவியல், பொறியியல் புலம்[21]
  • 2017: EPFL முன்னாள் மாணவர்கள் விருது[1]
  • 2017 - 21:2017 பிஐ இரேச்சல்[22] உரோசனுடன் ' அண்டத் தோற்றத் ' திட்டச் சைமன்சு அறக்கட்டளை விருது,
  • 2017 - 22: " பெருந்திரள் ஈர்ப்பு, அண்டவியல் " திட்டத்திற்கான ERC ஒருங்கிணைப்பு நல்கை PI[23]
  • 2016 - 21: அரசு கழக வொல்ப்சன் தகைமை விருது[12]
  • 2012 - 13: " பெருந்திரள் ஈர்ப்பு விசையில் அண்மைய முன்னேற்றங்கள் " திட்டத்திற்கான PI இன் ACES முன்கூட்டிய வாய்ப்பு நல்கை [24]
  • 2010 - 14: " அண்டவியல் சட்டகத்துக்கு அறைகூவல் " திட்டத்திற்காக சுவிசு தேசிய அறக்கட்டளை பேராசிரியரின் PI நல்கை[24]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Alumni Award Recipients". www.epflalumni.ch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  2. 2.0 2.1 2.2 "Claudia de Rham | Blavatnik Awards for Young Scientists". blavatnikawards.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  3. Anna, De Rham, Claudia (2005). Braneworld cosmology beyond the low-energy limit. http://ethos.bl.uk/OrderDetails.do?uin=uk.bl.ethos.615190. 
  4. "McGill Physics: CHEP seminars". www.physics.mcgill.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  5. "CHEP Seminars 2007–2008". www.physics.mcgill.ca. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  6. "Claudia de Rham | Perimeter Institute". www.perimeterinstitute.ca. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  7. "Claudia de Rham". www.perimeterinstitute.ca. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  8. "Claudia de Rham | Cosmology and Astroparticle Physics – University of Geneva". cosmology.unige.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  9. "Claudia de Rham". www.phys.cwru.edu. Archived from the original on 16 April 2017. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  10. "TED | Institute for the Science of Origins". origins.case.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  11. "Expanding horizons: throwing new light on dark energy". Imperial College London. Archived from the original on 2 April 2017. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  12. 12.0 12.1 "Claudia de Rham". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  13. 13.0 13.1 "Claudia de Rham | TEDxCLE". www.tedxcle.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018."Claudia de Rham | TEDxCLE". www.tedxcle.com. Retrieved 17 January 2018.
  14. 14.0 14.1 de Rham, Claudia; Gabadadze, Gregory; Tolley, Andrew J. (2011). "Resummation of Massive Gravity". Physical Review Letters 106 (23): 231101. doi:10.1103/physrevlett.106.231101. பப்மெட்:21770493. Bibcode: 2011PhRvL.106w1101D. 
  15. Rham, Claudia de (1 December 2014). "Massive Gravity" (in en). Living Reviews in Relativity 17 (1): 7. doi:10.12942/lrr-2014-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2367-3613. பப்மெட்:28179850. Bibcode: 2014LRR....17....7D. 
  16. TEDx Talks (3 February 2016), Nature of the Graviton | Claudia de Rham | TEDxCLESalon, பார்க்கப்பட்ட நாள் 17 January 2018
  17. "UK Cosmo at Portsmouth – April 5th 2017". www.icg.port.ac.uk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  18. "IFT Christmas Workshop – csic.es". www.csic.es (in ஸ்பானிஷ்). Archived from the original on 18 January 2018. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  19. "Three innovative scientists receive US$100,000 (£75,000) each from prestigious Blavatnik Awards for Young Scientists". Blavatnik Awards Young Scientists. New York Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  20. "Awards, etc. – Cambridge University Reporter 6505". www.admin.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  21. Dunning, Hayley. "Imperial physicist wins first-of-its-kind science prize". Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  22. "New Initiative Ponders Origins of the Universe | Simons Foundation". Simons Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). 21 July 2017. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  23. Scheuber, Andrew. "Multi-million EU funding boost for Imperial researchers". Imperial College London. Archived from the original on 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  24. 24.0 24.1 "Home – Claudia de Rham". www.imperial.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடியா_தெ_இராம்&oldid=3782462" இலிருந்து மீள்விக்கப்பட்டது