கிறிசு கிராத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்தோபர் மைக்கேல் கிராத்தா
Christopher M. Hirata
பிறப்புநவம்பர் 30, 1982 (1982-11-30) (அகவை 41)
இப்சிலாண்டி, மிச்சிகன்
துறைஅண்டவியல் வானியற்பியல்
பணியிடங்கள்ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆய்வேடுபலவீனமான ஈர்ப்பு லென்சிங் கோட்பாடு மற்றும் தரவு பகுப்பாய்வு (2005)
ஆய்வு நெறியாளர்உரோசு செல்யாக்கு

கிறித்தோபர் மைக்கேல் கிராத்தா (Christopher M. Hirata) (பிறப்பு: நவம்பர் 30,1982) ஓர் அமெரிக்க அண்டவியலாளர் மற்றும் வானியற்பியலாளர் ஆவார்.

1996 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு போட்டியில் பொற்பதக்கம் வென்றபோது கிராத்தாவுக்கு 13 வயதாகும். கிராத்தா 2001 ஆம் ஆண்டில் கால்டெக்கில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1] 2005 ஆம் ஆண்டில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் உரோஸ் செல்ஜாக் மேற்பார்வையின் கீழ் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார் (தலைப்பு: " பலவீனமான ஈர்ப்பு வில்லைக் கோட்பாடும் தரவு பகுப்பாய்வும் "). 2005 முதல் 2007 வரை அவர் உயர் ஆய்வு நிறுவனத்தில் வருகைதரு அறிஞராக இருந்தார். 2006 முதல் 2012 வரை அவர் உதவி பேராசிரியராகவும் பின்னர் கால்டெக்கில் முழுப் பேராசிரியராகவும் இருந்தார் , அடுத்த கல்வியாண்டில் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்திற்கு அதே தகுதியில் சென்றார். இவர் தற்போது அப்பல்கலைக்கழகத்தின் அண்டவியல், வானியற்பியல் மையத்தில் (CCAPP) பேராசிரியராக உள்ளார்.

ஆராய்ச்சி[தொகு]

அண்ட நுண்ணலைப் பின்னணி, இருண்ட ஆற்றல், புடவியின் பால்வெளிகளின் விரிவாக்கம், பெரிய அளவிலான புடவிக் கட்டமைப்பை விரைவுப்படுத்துதல் இந்தக் கட்டமைப்புகளின் உருவாக்கம் - மீள்மின்னனாக்க ஊழி, அண்டவியல் கருவியாக ஈர்ப்பு வில்லைகள்) ஆகியவை கிராத்தாவின் ஆராய்ச்சி முதன்மை ஆய்வுப் புலங்களாகும். கிராத்தா கோட்பாடும் நோக்கீட்டுத் தரவுகளின் பகுப்பாய்வும் தொலைநோக்கிகளின் வடிவமைப்பில் (குறிப்பாக நாசாவின் அடுத்த தலைமுறை விண்வெளித் தொலைநோக்கிகள்) செயல்படுகிறது. அவரது கவனம் அண்டவியல் மற்றும் இருண்ட ஆற்றல் மீதே உள்ளது.

பல்துறை கணினி ஆய்வுகள் , கோட்பாட்டு ஆய்வுகள், கருவி மேம்பாடு உள்ளிட்ட நோக்கீட்டு வானியல் ஆகியவற்றை இணைக்கும் துல்லிய அண்டவியலின் முன்னணி வல்லுராக கிராத்தா கருதப்படுகிறார்.[2]

2010 ஆம் ஆண்டில் திமித்ரி செலியாக்கோவிச்சுடன் இணைந்து , புடவி முதல் கட்டமைப்புகள் உருவானதைக் கணக்கிடுவதற்கான அண்டவியல் சிற்றலைவுக் கோட்பாட்டில் முன்னறியாத விளைவைச் சுட்டிக்காட்டினர்.[3] இது அடர்துகள் ஊடகத்தில் ஒலியின் வேகம் (இருண்ட பொருளுக்கு மாறாக) வெகுவாகக் குறைந்துவிட்டது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. மீளாக்க ஊழியில்முதல் அணுக்கள் உருவாகும்போது (சார்பியல் முதல் வெப்ப விரைவுகள் வரை) இது அடர்துகள் ஊடகத்தின் மீயொலிவேக ஓட்டங்களுக்கு வழிவகுத்தது.இதுஇருபடி சிற்றலைவு மொழியில், வேகமாக நகரும் இருண்ட பொருளின் ஈர்ப்பு விசையின் தாக்கத்தின் கீழ் செயல்பட்டது. கிராத்தா, செலியாக்கோவிச்சின் கூற்றுப்படி , இது கவனிக்கக்கூடிய விளைவுகளுடன் முதல் கட்டமைப்புகளின் உருவாக்கத்தை அடக்கிவைப்பதற்கு வழிவகுத்தது.

பிறருடன் சேர்ந்து , துகள் இயற்பியலின் அடிப்படை கேள்விகள் மற்றும் புதிய கண்காணிப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் குறித்த வாய்ப்புள்ல கருதுகோள்களுக்காக வானியல் தரவுகளிலிருந்து தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு திட்டத்தை அவர் தொடங்கினார். புடவியின் முடுக்கம் இருண்ட ஆற்றலைக் குறிக்கிறதா ( கூடுதல் மாறும் அளவன் புலத்துடன்பொது சார்பியலைத் தக்கவைத்துக்கொள்வது) அல்லது பொது சார்பியல் கோட்பாட்டின் மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது ஒரு மைய கேள்வி.

அவர் நாசாவின் முன்மொழியப்பட்ட நான்சி கிரேசு உரோமன் விண்வெளி தொலைநோக்கியில் (முன்பு வைட்பீல்டு அகச்சிவப்பு அளக்கை விண்வெளி தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டது) உறுப்பினராக உள்ளார்.

பாராட்டுகள்[தொகு]

  • 2012 - குடியரசு தலைவர் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருது (PECASE)
  • 2013 - சைமன்சு அறக்கட்டளை ஆய்வாளர்
  • 2014 - எலன் பி. வார்னர் பரிசு
  • 2018 - புடவியில் முதல் பால்வெளிகளின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் , துல்லியமான அண்டவியலின் மிக திறன்வாய்ந்த கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படை பங்களிப்புகளுக்கான இயற்பியல் புதிய ஒரைசன்சு திருப்புரிசு[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Caltech senior heads for graduation with 4.2 GPA, record of leadership, and is only 18". Caltech News. 13 June 2001.
  2. "Ohio State Researcher Wins Top Prize for Young Astronomers". 31 January 2014.
  3. Tseliakhovich, Dmitriy; Hirata, Christopher (2010). "Relative velocity of dark matter and baryonic fluids and the formation of the first structures". Physical Review D 82 (8): 083520. doi:10.1103/PhysRevD.82.083520. Bibcode: 2010PhRvD..82h3520T. 
  4. "Breakthrough Prize – Fundamental Physics Breakthrough Prize Laureates – Christopher Hirata". breakthroughprize.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_கிராத்தா&oldid=3767842" இலிருந்து மீள்விக்கப்பட்டது