கியோமிசு-டேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கியோமிசு-டேரா
Kiyomizu-dera
清水寺
Kyoto-Kiyomizudera, Japan.jpg
கியோமிசு கோயிலின் தலைமைக் கட்டடம்.
தகவல்கள்
மதப்பிரிவு கித்தாஹொசோ
நிறுவல் 798
முகவரி கியோட்டோ
நாடு சப்பான்
இணையத்தளம் http://www.kiyomizudera.or.jp/

Dharma Wheel.svg வலைவாசல்:பௌத்தம்

கியோமிசு-டேரா (Kiyomizu-dera, சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது[1]. அரண்மனையை ஒட்டியுள்ள இந்தக் கோயில், சப்பானியக் கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது. இதன் முக்கிய பகுதிகள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

கியோமிசு-டேரா கோயில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்தது[2]. கிபி 798 இல் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய கட்டடங்கள் 1633 ஆம் ஆண்டில் டொக்குகாவா யேமிட்சு என்ற இராணுவத் தலைவரின் கட்டளையின் பேரில் மீளக்கட்டப்பட்டது[3]. இக்கட்டட அமைப்பில் எந்தவொரு ஆணியும் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் பெயரை அடியாகக் கொண்டு இக்கோயிலுக்கு இப்பெயர் அமைந்தது. கியோமிசு என்றால் தெளிந்த நீர், அல்லது தூய நீர் எனப் பொருள்[4].

2007-இல், புதிய ஏழு உலக அதிசயங்களின் இறுதிப் பட்டியலின் 21 இடங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது[5]. ஆனாலும், புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

[தொகு] காட்சிக் கூடம்

[தொகு] குறிப்புகள்

[தொகு] வெளி இணைப்புகள்

அமைவிடம்: 34°59′42″N 135°47′06″E / 34.995, 135.785

"http://ta.wikipedia.org/w/index.php?title=கியோமிசு-டேரா&oldid=1088609" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்