கிங் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைStudy Here, Succeed Anywhere
வகைகல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்2007
நிறுவுனர்கிரு ஜே. இளங்கோ
தலைவர்திருமதி கலா இளங்கோ
முதல்வர்திருமதி பானுமதி
பணிப்பாளர்முனைவர் நவீன் இளங்கோ
பட்ட மாணவர்கள்400
அமைவிடம், ,
வளாகம்10.29 ஏக்கர்கள் (4.16 ha)
இணையதளம்www.kingcolleges.org

கிங் தொழில்நுட்பக் கல்லூரி (King College of Technology) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல்லில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியின் நிறுவனரான திரு. ஜே. இளங்கோ மற்றும் தலைவர் திருமதி. கலா இளங்கோ ஆகியோர் இணைந்து இதை துவக்கியுள்ளனர். [1] இந்தக் கல்லூரிக்கு புதுதில்லி ஐ.ஐ.சி.இ-யால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐ.எஸ்.ஓ 9001 - 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

  • எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. - விஎஸ்எல்ஐ வடிவமைப்பு
  • எம்.இ. - மின்னணு ஆற்றல் மற்றும் செயலிகள்
  • எம்.இ. - உற்பத்திப் பொறியியல்
  • எம்.இ. - சுற்றுச்சூழல் பொறியியல்
  • எம்.பி.ஏ.
  • எம்.சி.ஏ.

கணினி மையம்[தொகு]

இங்கு பல்லூடக வசதிகளுடன், சமீபத்திய இன்டெல் கோர் டுயோ மற்றும் கோர் ஐ 3 செயலிகளுடன் கூடிய, முழுமையான மையப்படுத்தப்பட்ட, குளிர்சாதன வசதியுள்ள கணினி ஆய்வகம் உள்ளது. இந்த மையமானது, டிஜிட்டல் போர்டுகளைக் கொண்டுள்ளது. இவை கற்பிப்பதற்கும், 24 மணிநேர இணைய வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

வளாகத்தில் தானியங்கி பணப்பொறி வசதி உள்ளது, மேலும் தமிழ்நாடு மற்றும் கேரள பாணி உணவைக் கொண்ட மாணவர், மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகளை கொண்டுள்ளது. மேலும், விடுதிகளில் உள்ள மாணவர், மாணவிகளுக்கு உடல்நல்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல வாகன வசதி உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Engineering college student commits suicide in Namakkal - Times of India".