கார்பேத்தைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பேத்தைட்டு
Carpathite
அமெரிக்க கலிபோர்னியாவின் புதிய இத்ரியா மாவட்டத்தில் கிடைத்த கார்பேத்தைட்டு
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுC24H12
இனங்காணல்
நிறம்மஞ்சள், மஞ்சள் பழுப்பு
படிக இயல்புஊசி முதல் மெல்லிய தகடுக் குழுக்கள் மற்றும் இழை போன்ற கதிர்வீச்சுத் தொகுதிகள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிளப்பு[001], [100] இல் சரிபிளவு மற்றும் [201]
முறிவுசிராய்ப்பு போல
விகுவுத் தன்மைநெகிழும், கிட்ட்த்தட்ட நெகிழி
மோவின் அளவுகோல் வலிமை1.5
மிளிர்வுபளபளப்பு - விடாப்பிடியானது
கீற்றுவண்ணம்மஞ்சள் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி1.35
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+/-)
ஒளிவிலகல் எண்nα = 1.760 - 1.780 nβ = 1.780 - 1.982 nγ = 2.050 - 2.150
இரட்டை ஒளிவிலகல்δ = 0.290 - 0.370
பிற சிறப்பியல்புகள்ஒளிரும் – நீலம் முதல் நீலப்பச்சை வரை
மேற்கோள்கள்[1][2][3][4]

கார்பேத்தைட்டு (Carpathite) என்பது C24H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் கனிமம் ஆகும். இக்கனிமத்தை பென்டிடோனைட்டு என்றும் கார்பாடைட்டு என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். மிகவும் அரிய நீரகக்கரிம கனிமவகை என்றும் பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் கோரோனீன் வகை கனிமம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள்.

கண்டுபிடிப்பு[தொகு]

முதன்முதலில் 1955 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் டிரான்சுகார்பேத்தியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அங்குள்ள கார்பேத்திய மலைகளின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சிலோவாக்கியா நாட்டின் பிரெசோவ் மண்டலம், உருசியாவின் காம்சட்கா மாகாணம், கலிபோர்னியாவின் சான் பெனிட்டோ மாகாணம் ஆகிய பகுதிகளிலும் கார்பேத்தைட்டு கனிமம் கிடைப்பதாக அறியப்படுகிறது [2].

தோற்றம்[தொகு]

உக்ரைன் நாட்டில் டையோரைட்டு, ஆர்கில்லைட்டு வகை ஊடுறும் தீப்பாறைகளின் உட்குழிகளில் இக்கனிமம் தோன்றுகிறது. கலிபோர்னியாவில் இது தாழ்வெப்பநிலை நீர்வெப்ப நிலைகளில் தோன்றுகிறது. இத்ரியலைட்டு, படிகவடிவமற்ற கரிமப் பொருள்கள், கால்சைட்டு, பேரைட்டு, குவார்ட்சு, சின்னபார், மெட்டாசின்னபார் உள்ளிட்ட கனிமங்களுடன் சேர்ந்து கார்பேத்தைட்டு கனிமம் கிடைக்கிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பேத்தைட்டு&oldid=2731936" இலிருந்து மீள்விக்கப்பட்டது